கண்டி பல்லேகலவில் இடம் பெறும் தேசத்திற்கு மகுடம், கண்காட்சியில் இம் முறையும் அறிவக நிலையத்தை பார்வையிடும் வாய்ப்பு மக்களுக்குக் கிட்டும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரித்துள்ளது.
அறிவக நிலையத்திலிருந்து மக்களுக்குப் பெறக்கூடிய வசதிகள் மற்றும் சேவைகளை விளக்கிக் கூறும் வகையில் அறிவக நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவக நிலையத்திற்கு விஜயம் செய்வோருக்கு இலவசமான இணை நுழைவு, மின் அஞ்சல் அனுப்புதல் வீடியோ விளையாட்டுக்களிலும் ஈடுபடக் கூடிய வசதிகள் காணப்படுகின்றன.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் இலவச வெளியீடான அறிவேடு மற்றும் துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றையும்
மக்களுக்கு இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.



தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் இம்முறையும் அறிவக நிலையம்.


























