இலங்கைக்கு வெளியே இலங்கையின் முதலாவது அறிவகம் (நெணசல) ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்ககை தூதுவராலயத்தில் இவ் அறிவகம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சென்றுள்ள இலங்கையர்களின் வசதிகருதி இது அமைக்கப்பட்டதாக முகவர் நிலையம் குறிப்பிடுகிறது.
நவீன தகவல் தொடர்பாடல் வசதிகளை இந்த அறிகவம் உள்ளடக்கியதாகும் என்று முகவர் நிலையம் கூறுகிறது.
அங்குள்ள, இலங்கையர்களுக்கு இந்த அறிவகத்திற்கு சென்று இலங்கையில் உள்ள உறவுகளுடன் தகவல்களைப் பரிமாறவும்,கணினிப் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முகவர் நிலையம் குறிப்பிடுகிறது.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியதில் தொழில்புரிகிறார்கள்.
ஆயிரம் அறிவகங்களை அமைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இது வரை இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அறிவகங்களின் எண்ணிக்கை 665 (அறுநூற்று அறுபத்து ஐந்து) ஆகும்.





அறுநூற்றுப் பதினைந்தாவது, அறிவக நிலையத்தை களிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஸ திறந்துவைத்தார். 













