
வாழ்கையை இலகுவாக்க ஒவ்வொருவரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைக் காண்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும்- அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய
வாழ்கையை இலகுவாக்க ஒவ்வொருவரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைக் காண்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்,ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற பிறப்பு,விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஒரு சிலநிமிடங்களில் வழங்கி வைக்கும் வைபவத்தில் அமைச்சர் உரைநிகழ்த்தினார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சியம்பலாபிடிய, “நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவில் பாரியளவிலான மாற்றங்கள் ஏற்படும்” என்று தெரிவித்தார். அவர் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"அதிமேதகு ஜனாதிபதியவர்கள் எமது அமைச்சை அண்மையில் ஸ்தாபித்து, எமக்கு இலக்குகளை வழங்கியிருந்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பாடல் அமைச்சுக்கு 2016ம் ஆண்டில், ஆசியாவின் அதிசயமான நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்திக் கீழ்; நாட்டில் 35மூ காணப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவை 75மூ ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இதே போன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிதாக ஒருலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்பையும் எமக்கு வழங்கினார். தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் எமக்குக் கிடைக்கும் அண்ணியச் செலாவணி 4 கோடி அமெரிக்க டொலர்களாகும் . இதனை ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் பணியையும் ஜனாதிபதி எம்மிடம் ஒப்படைத்தார்.இவை அனைத்திற்கும் மேலதிகமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இந்த சிறப்பான உபகரணத்தின் அவசியத்தை, வாழ்க்கைக்கு வசதியானதாக மாற்றும் பணியையும் எம்மிடம் ஒப்படைத்தார்.
நாளாந்தம் நாம் இந்த இலக்கை நோக்கி பயணித்துவருகிறோம். இந்த வரவு- செலவுத் திட்ட ஆவணத்தை உற்றுநோக்கினால், எமது அமைச்சின் கீழ் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் விஷேட ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக, கிராமப்பகுதிகளின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தனியாக அமைச்சுக்கு 500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையுடன் பொலன்னறுவை மாவட்டத்தை, அனுராதபுரத்தில் நடைபெற உள்ள தேசத்திற்கு மகுடம் திட்டத்துடன் நாம் விஷேடமாக தெரிவு செய்தோம். குறிப்பாக அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிற்கு கௌரவமளிக்கும் வகையிலும் பொலன்னறுவை மாவட்டத்;தை தெரிவு செய்ததாக நான் கூறினேன். எமது ஐஊவுயு நிறுவத்தைச் சேர்ந்த திரு.திஸாநாயக்க அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று, நாம் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இதனை ஆரம்பிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். தகவல் தொழில்நுட்ப நிலையம் இதற்கு அணுகூலமாக அமைந்தது. இன்று எதனைத் திறந்துவைத்தோம் என்பதைப் பற்றிக் கூற நாம் தயாராக உள்ளோம். பல தடவைகள் கூறியதனால் அதனை மீண்டும் கூறவிரும்பவில்லை. வாழ்கையை இலகுவாக்க தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல். கடந்தகாலங்களில் பிறப்புச் சான்றிதழைப் பெறுவது பற்றி கூறினால் எனது குழந்தைப்பருவம் ஞாபகம் வருகிறது. இரண்டுவாரங்களுக்கு முன்னரே எனது அப்பா தயாராகிவிடுவார்.கச்சேரியில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? யாரை முதலில் தொடர்பு கொள்வது என்று. பிறப்புச் சான்றிதழை பெற பல்வேறு முறைகளில் தயாராகிறோம்.உங்களுக்கும் நினைவிருக்கும். இன்று இவ்வாறான தேவைகள் கிடையாது. இன்று கச்சேரிக்கு அல்ல எந்த பிரதேச செயலகத்திற்கு சென்றாலும். பொலன்னறுவையில், பொலன்னறுவைவையச் சேர்ந்த ஒருவருக்கு சில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழின் பெயரைக் பெயரைச் சொல்லி முடிப்பதற்கு முன்னர், சான்றிதழ் வழங்கப்பட்ட நான் கண்டேன்.விவகாகச் சான்றிதழும் இவ்வாறே. ஆனால் இறப்புச் சான்றிதழ் இவ்வாறானதல்ல. அடுத்த இரண்டு சான்றிதழ்களையும் விரைவாகப் பெற முடியும். இறப்புச் சான்றிதழையும் குடும்ப அங்கத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில், மிகவிரைவாக இதன் கீழ் பெற்றுக் கொள்ள முடியும். இது தான் இன்று இங்கு நிறைவேற்றப்படும் பணி. நாம் இத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டோம். இவற்றைப் போன்று தகவல் தொழில்நுட்பத்தைப் தமது வாழ்வில் பயன்படுத்துவதைக் காண நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இன்று கையடக்கத தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவர் குறிப்பிட்ட புள்ளிவிபரத்தை வாசித்தேன். நாட்டில் இரண்டு கோடி பத்து இலட்சத்திற்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசிகள் காணப்படுகின்றன. மக்கள் சனத்தொகை 2 கோடி. ஒரு கோடி எழுபத்தைந்து இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள்.35 இலட்சத்திற்கும் அதிகமான நிலையான தொலைபேசிகள்.10 வருடங்களுக்கு முன்னுள்ள நிலையை மீட்டிப்பார்தால் கையடக்கத் தொலைபேசிகள் மிக அரிதானவை. செங்கல்லைப் போன்று இருந்தவை பெரிய வர்த்தகர்களுக்கு மாத்திரமே சொந்தமாக இருந்தன. அது பெருமையை வெளிப்படுத்தும் உபகரணமாக இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை. இரண்டு கைகளிலும், சட்டைப் பையிலும் எந்த நபiரைப் பார்த்தாலும் கையடத்தொலைபேசிகளை காணமுடிகிறது.வாழ்;க்கையை இலகுபடுத்தும் உபகரணம். பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியாக இருக்கட்டும்,கிராம அதிகாரியாக இருக்கட்டும், நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவராக இருக்கட்டும் இவர்கள் அனைவரும் கையடக்கத்தொலைபேசியை நாளை பயன்படுத்தவதை காண விரும்புகிறோம். இதற்காக நாம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்போம். இதற்கு நாம் தயாராக உள்ளோம் என்று எமது அமைச்சின் செயலாளரும் தெரிவித்திருந்தார்..
குறிப்பாக கிராமப்புறப் பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம். இதேபோன்று 600க்கும் அதிகமான அறிவக நிலையங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எதிhவரும் ஆண்டில் ஆயிமாக்கும் திட்டம். இந்த சகல சந்தர்ப்பங்களின் போதும் பொலன்னறுவை மாவட்டத்தின் உங்கள் தலைவரவர்கள், நான் ஏற்கனவே கூறியதைப் போன்று அதிகம் மதிக்கப்படுகின்ற. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் எமது அரசியல் அதிகார உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் கௌரவமாகவும், எமது நாட்டுக்கு உயிரூட்டும் சகோதரரர்கள் உள்ள மாவட்டத்திற்கு வழங்கும் கௌரவம் என்ற வகையிலும் நாங்கள் தயாராக உள்ளோம்.எமது அமைச்சு முதலிடம் வழங்கி பொலன்னறுவை மாவட்டத்தை எமது வேலைத்திட்டங்களில் பொலன்னறுவை மாவட்டத்தை இணைத்துக் கொள்ளும் செய்தியை வழங்கி, அனைவருக்கும் வளமான எதிர்காலம் கிடைக்கட்டுமாக



வாழ்கையை இலகுவாக்க ஒவ்வொருவரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைக் காண்பது அரசாங்கத்தின் நோக்

























