இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் இலங்கைப் புகையிரதத் திணைக்களமும் புகையிரதப் போக்குவரத்து முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு செய்மதித் தொழில்நுட்பத்தைப் பாவிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்காக இலங்கைப் புகையிரதத் திணைக்களம்இ இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் ஜீ ட்ரக் சொலுhஷன்ஸ் ப்ரைவெற் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ஓர் புரிந்துணர்வூ ஒப்பந்தத்துக்கு வந்தன. கடந்த திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் திகதி கொழும்பிலுள்ள இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தில் மேற்கூறப்பட்ட புரிந்துணர்வூக்குக் கைச்சாத்திடப்பட்டது. இப் புரிந்துணர்வூ ஒப்பந்தத்தின் படி செய்மதித் தொழில்நுட்பத்தைப் பாவிக்கும் முறைமையொன்றின் பிரதிபலனாக போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள புகையிரதங்கள் எங்கே எவ்வித நிலையிலிருக்கின்றன என எவராலும் உடனடியாக அறிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வரப்போகிறதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அரசதுறை புத்துருவாக்கம் செயல் திட்டப்பணிப்பாளர் வசந்த தேசப்பிறிய தெரிவித்தார்.
அதற்கான ஆவணத்துக்குக் கைச்சாத்திடல் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த் வசந்த தேசப்பிறிய “புதிய முறை அமுல்படுத்தப்பட்டால் தாம் செல்லவிருக்கும் புகைவண்டியின் வருகையில் தாமதம் ஏற்படுமா? எவ்வளவூ நேரம் தாமதம் ஏற்படும்? போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிந்துகொள்ளச் சுயமாகவே அதனைத் தெருவிக்கும் இலகுவான சேவையின் பயனை நாடலாம் எனவூம் இதன்படி தம் கையடக்கத் தொலைபேசியினுhடாகவோ இணையத்தளத்தினுhடகவோ தம் பயணம் செய்யவேண்டிய புகைவண்டி எங்கே எந் நிலையிலுள்ளது என்பதை உடனே அறிந்துகொள்லாம்”; எனவூம் தெரிவித்தார். இப்புரிந்துணர்வூ ஒப்பந்தத்துக்கு இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் சார்பில் கைச்சாத்திட்ட இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் பீ.பீ. விஜேசேகர தமது கருத்தைத் தெரிவிக்கையில்: “இப் புதிய முறை மக்களுக்கு ஒரு சிறந்த புகையிரதப் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கு மிகவூம் ஏதுவாகும். அதுமட்டுமல்ல இதன் காரணமாக இலங்கைப் புகையிரதத்திணைக்களத்தின் செயல்பாடுகளும் மிக இலகுவாகும்” என்று தம் நம்பிக்கையை எடுத்துரைத்தார்.
இது தொடர்பான தொழில்நுட்ப விபரங்களைக் கூறிய கொழும்பிலுள்ள இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் பிரதான புத்தாக்கல் உத்தியோகத்தர் பாளித சமரசிங்ஹ: “ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்துக்கு பரீட்சார்த்த ரீதியில் இத்திட்டம் நடத்தப்படும். பின்னர் 80 புகைவண்டி என்ஜின்களும் 310 புகைவண்டிகளும் இத் திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்படும். இதற்காகச் செய்மதித் தொழில்நுட்பத்தை மையமாகக்கொண்ட ஜீபீஎஸ் அல்லது குலோபல் பொஷிஷன் சிஸ்டம் மற்றும் ஜீஎஸ்எம் அல்லது குலோபல் சிஸ்டம் போ மொபைல் கொமியூனிகேஷன் தொழில்நுட்பத்தைத் தழுவிய குறிப்பிட்ட வகையின் 50 உபகரண ஒன்றியங்கள் இவ் 80 புகைவண்டி என்ஜின்களுக்குமாக (310 புகைவண்டிகளுக்குமாகாக) தேவையின்படி பொருத்தப்படும்;;. இதனால் மக்கள் புகையிரதத் தாமதத்தினால் ஏற்படும் இக்கட்டுகளிலிருந்து ஒரளவூ விடுவிக்கப்படுவார்கள். இதன் காரணமாக மாற்று ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ள அவர்களால் முடியூம்”என்றார்.
"It is hoped that the GPS/GSM units that will be installed in the trains will go a long way in offering a better train service to the people. This should also greatly facilitate particularly the work of the railway transport operation staff," Railways General Manager P. P. Wijesekera said.
Referring to the timeframe of the project SLR Colombo Chief Innovation Officer (CIO) Palita Samarasinghe said that initially this project would be implemented on a trial basis with the new devices installed on a few trains for a short time. But within five months the new device will be in full operation with 50 units distributed among 80 trains, installations being effected according to requirements.
"In addition Railway Operating Information System which is a major module in the railway information technology plan will also be developed and implemented along with this project," the CIO revealed.
http://www.dailymirror.lk/print/index.php/business/127-local/17931-satellite-technology-to-improve-railway-transport-management



புகையிரதப் போக்குவரத்து முகாமைத்துவத்தை மேம்படுத்தச் செய்மதித் தொழில்நுட்பம்


























