
அரச நிறுவனங்களின் தலைவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க முடியும் என்று அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பி.பீ. அபேகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்க தகவல தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர், நிலையத்தின் (ICTA) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இ- அரச கொள்கை தொடர்பாக அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்குடன், ஒழுங்குசெய்யப்படும் தேசிய மாநாட்டின் தென்மாகாண மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரை நிகழ்த்தினார்.
காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதான புத்தாக்கல் உத்தியோகத்தர்களும், இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.
நீண்ட காலம் அரசசேவையில் மூலம் பெற்ற அனுபவத்தைப் போன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பதன் மூலமும் மக்களுக்கு கூடுதலான திறமைவாய்ந்த மற்றும் வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க முடியும் என்று திரு. அபேகோன் இங்கு வலியுறுத்தினார்.
தொழில் தகைமைகளை மேம்படுத்தி, அரச சேவைகளின் வசதிகளை மக்களுக்கு வழங்க இந்த இ- அரச கொள்கை திட்டத்தினால், அடித்தளம் ஏற்படுத்தப்படுவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுடப் முகவர்நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்தார்.



அரச நிறுவனங்களின் தலைவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பது அவசியம்


























