
கையடக்கத் தொலைபேசி மக்களின் அன்றாடவாழ்வில் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான விடயமாக மாறியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற 2011 தெற்காசிய கையடக்கத் தொலைபேசிகள் மாநாட்டில் அவர் உரையாற்றினார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. கையடக்கத் தொலைபேசித் துறையுடன் தொடர்புடைய உள்நாட்டு வெளிநாட்;டுப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டார்கள்.
நிகழ்வில் உரைநிகழ்த்திய ரெஷான் தேவப்புர மேலும் உரைநிகழ்த்துகையில்,
கடந்த ஆண்டை விட மாநாடு இவ்வருடத்தில் வெற்றியளித்துள்ளதாகக் கூற முடியும். பிராந்தியத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி உள்ளடக்கங்களை தெரிவு செய்வதற்கான போட்டிக்கு கூடுதலான விண்ணப்பப்படிவங்கள் கிடைத்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . உலக சனத் தொகையில் பல்தூரிகைகளை பயன்படுத்துவதை விட இன்று கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியையும் தாண்டி கையடக்கத் தொலைபேசித் துறை முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கையடக்கத் தொலைபேசிகள் மக்களுடன் எந்தளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வது சிரமான காரியம் அல்ல.
இலங்கையில் கையடக்கத் தொலைபேசித் துறை துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை தொடர்பாக தூரதிருஷ்டியுடனும், சிறந்த முறையிலும் பணியாற்றுவதால் இந்த நலன்களை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள். தொடர்ந்தும் இதனை விஸ்தரிக்க இவ்வாறான சர்வதேச மாநாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.





தேசிய தகவல் தொழில்நுட்ப உள்ளடக்கங்களுக்கு விருது வழங்கும் ‘இ-சுவாபிமானி’ 2010 தேசிய விருது விழா சமீபத்தில் சினமன் கிறாண்ட் விடுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.; இவ்விழாவில் கௌவர அதிதியாக உரையாற்றிய சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தேசிய இ-உள்ளடககங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்தவரகளுக்கு ஊக்கமளித்தலும் அவரகள் திறமைகளை அபிவிருத்தி செய்வதும் சனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் சிறந்த வழிகாட்டலின் பிரதிபலன்கள் என்று எடுத்துரைத்தார். 













