General

எச்எச்ஐஎம்எஸ் சுகாதார மென்பொருள் மஹிந்த சிந்தனையின் குறிக்கோள்களை அடைவதில் மிகவும் முக்கியமானது

மின்னஞ்சல் அச்சிடுக

வைத்தியசாலை ஆரோக்கிய தகவல் முகாமைத்துவ முறைமை போன்ற மென்பொருட்கள் இந் நாடு மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் குறிக்கோள்களை அடைவதில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய கூறுகிறார்.

 

கேகாலையில் கரவணல்ல தள வைத்தியசாலையில் வைத்தியசாலை ஆரோக்கிய தகவல் முகாமைத்துவ முறைமை மென்பொருள் (எச்எச்ஐஎம்எஸ்)

(HHIMS); -Hospital Health Information Management Systems )

அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவுக்கு சமீபத்தில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதற்கான வைபவத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய அமைச்சர், இம் மென்பொருள் மக்களுக்கு சேவை வழங்கலை மிகச் சுமுகப்படுத்துகிறதெனவும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை சுமுகமாக்குவது “மஹிந்த சிந்தனை தொலை நோக்கு'' என்னும் அரசாங்க விஞ்ஞாபனத்தின் பிரதான குறிக்கோளென்றார்.

 

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் கேதாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும்  ஒருங்கிணைந்து உற்பத்தி செய்துள்ள இம் (எச்எச்ஐஎம்எஸ்) மென்பொருளின் காரணமாக நோயாளிகளின் பராமரிப்பு ஒரு நல்மாற்றத்தைப் பெறும்.  இதன் காரணமாக நோயாளிகள் வைத்தியசாலையை நாடும் ஒவ்வொரு முறையும் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. நோயாளிகளின் வைத்திய விபரங்களைப் பாதுகாக்கவும் தேவையான விபரங்களைத் தேவையானபடி பார்க்கவும்  வசதியை இம் மென்பொருள்  கொணரும்.  கேகாலை மாவட்டத்தில் ;  கரவணல்ல,  மாவனல்ல, உந்தேகொடை, கிதுல, தெரணியகல  ஆகிய ஐந்து வைத்தியசாலைகளில ஆறு மாதங்கள் பரீட்சார்த்த ரீதியில் செய்துபார்க்கப்பட்ட இம் மென்பொருள் தற்போது இலங்கையின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் அமுல்படுத்தத் தயாராகவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையின் வெற்றியைத் தொடர்ந்து இ- ஸ்ரீலங்கா புது முயற்சிக்கு ஜனாதிபதிய

மின்னஞ்சல் அச்சிடுக

ICTA Chairman, Prof.  P. W. Epasinghe

ஒரு மாதத்தில் 50 ஆயிரம் பேருக்கு அடிப்படை கணணி அறிவை வழங்கும் திட்டம் தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரன்ஜித் சியம்பலபிடிய அவர்களின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது  சிரேஷ்ட அமைச்சர்  அதாவுத செனரவிரத்ன, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவரும்,ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் பி.டப்ளியு. அப்பாசிங்ஹ, அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்பட பலபிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

கேகாலை,கொட்டியாகுபுர வித்யாசாகர பிரிவென் விஹாரையில் இடம் பெற்ற வைபத்தில் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின்  தலைவர் பேராசிரியர் பி.டப்ளியு.எ அப்பாசிங்ஹ அவர்கள்; உரையாற்றுகையில்,

“இ- ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு முக்கிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் இத்தருனத்தில் மிகச்சுருக்கமான முறையில் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துவது எனது பொறுப்பாகும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் வாசிக்க...
 

அபிவிருத்தியின் நலன்களை உண்மையான விதத்தில் அனுபவிக்க தகவல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது

மின்னஞ்சல் அச்சிடுக

(From left) Silver medalist R. M. Shivanti, ICTA Chairman Prof. P. W. Epasinghe, Senior Rural Affairs Minister Athauda Seneviratne, Hambantota District MP Namal Rajapaksa and Telecommunication and Technology Minister Ranjith Siyambalapitiya

அபிவிருத்தியின் நலன்களை உண்மையான விதத்தில் அனுபவிக்க தகவல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் இலங்கைக்கு வினைத்திறனானஅபிவிருத்தியை அடைந்து கொள்ள தகவல்தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மக்கள் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இ- திரிய தேசிய தகவல் தொழில்நுட்ப அறிவுத்திட்டத்தை கேகாலை கொடியாகுபுர விதயாசாகர, பிரிவெனா விஹாரையில்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து அவர் உரை நிகழ்தினார். சமூர்த்தி பயனாளிகள் மற்றும் பாடசலை மாணவர்கள்  ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு மாதத்திற்குள் அடிப்படை கணணி அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும்

மேலும் வாசிக்க...
 
JPAGE_CURRENT_OF_TOTAL
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Preview of 2011

புதிய நிகழ்வுகள்

GIC 1919 Annual Report

Download GIC Annual Report 2009

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

 

 

  ICTA News

  Procurement Notices