
.jpg)
சைபர் பாதுகாப்பு வாரம் போன்ற செயற்பாடுகள் காலத்திற்கு தேவையாகும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர், பீ. டப்லிய+ எப்பாசிங்க தெரிவித்துள்ளார்.
சைபர் பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாடடில்; அவர் உரைநிகழ்த்தினார்.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கீழ் இயங்கும் இலங்கை கணணி அவசரப் பதில் வழங்கும் கூட்டமைப்பு நான்காவது தடவையாகவும் இடம்பெற்ற இந்த மாநாட்டை ஏற்பாடு ஒழுங்கு செய்திருந்தது.
கணணி, இணையம் என்பன விரைவாக மக்களுக்கு நெருக்கமானவையாக மாற்றம் கண்டு வரும் நிலையில் அவற்றின் பல்வேறு படிமுறைகள் பற்றி, சரியான விளக்கத்தை பெற்றிருப்பது அவசியம் என்று போராசிரியர் எப்பாசிங்க குறிப்பிட்டார்.



சைபர் பாதுகாப்பு காலத்தின் தேவை : பேராசிரியர் எப்பாசிங்க தெரிவிப்பு


























