

அறிவக மத்திய நிலைய செயற்பாட்டாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை, பெற்றுக்கொள்ளும் அறிவக மன்ற சந்திப்பு ஒக்டோபர் மாதம் 29ம் திகதி அனுராதபுரம் ட்யங்கங் ஹோட்டலில் இடம்பெறுகிறது.
ஆறிவக மத்திய நிலையத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் மேலும் வினைத்திறனாக மற்றும் சிறப்பாக மேற்கொள்வது தொடர்பில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நோக்கமாகும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகிறது.
இந்த அறிவக மன்றத்தின் சந்திப்பு அமைவாக இ- சமூகம் தகவல் தொழில்நுட்ப படைப்புக்களை உள்ளடக்கிய கண்காட்சியொன்றும் அங்கு இடம் பெறுகிறது.
மக்களின் வாழ்வை இலகுவாக்கும் நோக்குடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுடபம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து விளக்கும் படைப்புக்களையும் மக்களுக்கு இங்கு பார்வையிட முடியும்.
தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய, வடமத்திய ஆளுனர் பேர்ட்டி ப்ரேம்லால் திசாநாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொள்வார்கள்.



அறிவக மன்ற சந்திப்பு – ஒக்டோபர் 29ம் திகதி

























