
இ-ஸ்வாபிமாணி விருதுவழங்கும் வைபவம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் இம்மாதம் 22ம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் இடம் பெறும்.
இ- அரசாங்கம் மற்றும் நிறுவனம், இ-சுகாதாரம் மற்றும் சுற்றாடல்,
இ- கல்வி மற்றும் கற்றல், இ- கல்வி மற்றும் களியாட்டம் உள்ளிட்ட பிரதான 11 துறைகளுக்காக விருதுகள் வழங்கப்படும்.
விருது வழங்கும் நிகழ்விற்காக, 148 படைப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு இதில் வெற்றியீட்டும் 20 இ-படைப்பாளர்களுக்கு இங்கு விருதுகள் வழங்கப்படும்.
திறன்சார் 12 விருதுகளும், இளம்விருது, யுரி உறுப்பினர் விருதுகள் 2ம் இங்கு வழங்கிவைக்கப்படும். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இந்த விருது வழங்கல் நிகழ்வை ஒழுங்குசெய்திருப்பதோடு, விருது வழங்கும் நிகழ்வு நான்காவது தடவையாக இடம்பெறுகிறது.



இ-ஸ்வாபிமாணி 2011 விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில்


























