
ஒரு மாதத்தில் 50 ஆயிரம் பேருக்கு அடிப்படை கணணி அறிவை வழங்கும் திட்டம் தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரன்ஜித் சியம்பலபிடிய அவர்களின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனரவிரத்ன, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவரும்,ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் பி.டப்ளியு. அப்பாசிங்ஹ, அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்பட பலபிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
கேகாலை,கொட்டியாகுபுர வித்யாசாகர பிரிவென் விஹாரையில் இடம் பெற்ற வைபத்தில் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பி.டப்ளியு.எ அப்பாசிங்ஹ அவர்கள்; உரையாற்றுகையில்,
“இ- ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு முக்கிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் இத்தருனத்தில் மிகச்சுருக்கமான முறையில் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துவது எனது பொறுப்பாகும் என்று நான் நம்புகிறேன்.
தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழல்நுட்பத்தை எமது நாட்டின் அபிவிருத்திக்கு கூடுதலாக பயனளிக்கும் வகையில்,பயன்படுத்திக் கொள்ளும் பல வேலைத்திட்டங்களை கடந்த காலப்பகுதியில்,நாம் நடைமுறைப்;படுத்தினோம். இதே போன்று அதிமேதகு ஜனாதிபதியவர்களின் தலைமையின் கீழான அரசாங்கம் இந்த சகல வேலைத்திட்டங்களையும் அர்த்தமுள்ள வகையில் சமூகமயப்படுத்த வழங்கிய ஒத்துழைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்வது எனது கடமையாகும். குறி;ப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எமது அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய ஆகியோரின் ஒத்துழைப்பு கிடைக்காவிடின் எம்மால் இந்தளவு தூரம் வெற்றிகரமாக முன்னேறியிருக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.
ஆரசாங்கம் தகவல் தொழில்நுட்ப துறைக்கு வழங்கியுள்ள முன்னுரிமை 2012 வரவு -செலவுத்திட்ட அறிக்கையின் மூலம் மற்றுமொரு தடைவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பல்வேறு வரவு-செலவுத்திட்டங்களுக்கு மத்தியில், கணணி அறிவை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்பட்டள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலனோருக்கு, கணணியைப்பயன்படுத்தி, தமக்குத் தேவையான இலகுவாக பணியை வினைத்திறன் வாய்ந்ததாக அமைத்துக் கொள்வதற்கான சந்தர்பத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தகவல்,தொழில்நுட்பத்தின் நலன்களை உயர்ந்தபட்ச்ச அளவில், மக்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம அவற்றை பயன்படுத்துவதற்கான சாதாரண அறிவிவு இருந்தால் மாத்திரமே கிடைக்கும்.
கணணி, இணையம், மின்அஞ்சல் கையடக்கத் தொலைபேசி என்பன எந்தளவு தூரம் நாட்டில் பரந்து காணப்பட்டாலும் அவற்றைப்பயன்படுத்த குறிப்பாக இந்த உபகரணங்களை சரியாக மற்றும் அர்த்தமுள்ள வகையில், பயன்படுத்த பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காவிடின்,இந்த உபகரணங்களின் உச்ச பயன்கள் எமது நாட்டுக்கு கிடைக்காது என நான் நம்புகிறேன். அதனால் தகவல் தொடர்பாடல் தொழில்;நுட்ப முகவர் நிலையம் என்றவகையில் நாம் பொறுப்புக்களுக்கு வலுசேர்த்து ஆரம்பமாக தகவல் தொழில்நுட்ப அறிவு தொடர்பான நிகழ்ச்சிகளை கடந்த ஆண்டுகளில் நாம் ஆரம்பித்தோம்.
அரச துறை அதிகாரிகளுக்கு கணணிப்பாவனை தொடர்பான பயிற்சி வழங்கும் நடவடிக்கை நாம் ஆரம்பித்த மிக முக்கிய வேலைத்திட்டமாகும். இதற்கு அமைவாக 14000 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கவும்,அவர்களை தகவல் தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தவும் எம்மால் முடிந்ததது .
இதற்கு மேலதிகமாக அறிவகத்திற்கு(நெசனலவிற்கு) வருகைதரும் விவசாயிகள், தேரர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் உட்பட மாணவ, மாணவியருக்களுக்கும் பயிற்சிநெறிகளை நடத்த எம்மால் முடிந்தது.
இன்று நாம் ஆரம்பிக்கும் இப்புதிய வேலைத்திட்;டதின் மூலம் இதுவரை நாம் உள்வாங்காத சமூகக்குழுவிற்கு தகவல், தொழில்நுட்ப அறிவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமூர்த்தி பயனாளிகள் இருபதாயிரம் பேருக்கு இந்தப் பயிற்சியை முதல்கட்டமாக வழங்கும் நடவடிக்கையை இன்று முதல் நாம் ஆரம்பிக்கிறோம். சமூர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்கும், இந்த அடிப்படை இலகு கணணி அறிவின் மூலம் அவர்களின் வாழ்கை மட்டத்தை முறையான விதத்தில் மாற்றியமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.
இதனால் நாம் இந்த வேலைத்திட்டததிற்கு இ-ஊக்கம் (இ- திரிய) என்ற பெயரைப் பயன்படுத்துகிறோம். சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷேட நலன்கள் அற்ற சமூகக்குழுவிற்கு தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தைரியப்;படுத்துவது இதன் கருத்தாகும். அவர்களுக்கு உலகில் முன்நோக்கிச் செல்ல தைரியத்தையும்,வலுவையும் வழங்குவதாகும்.
இ-ஊக்கம் தகவல் தொழில்நுட்ப அறிவுத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஐம்பதாயிரம் பேருக்கு கணணி அறிவை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டில் உள்ள சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிற்சி நடவடிக்கைகள் இடம் பெறுகின்றமை விஷேட அம்சமாகும்.
2016ம் ஆண்டளவில் நாட்டின் கணணி அறிவை 70மூ ம் வரை அதிகரிக்க எமக்குள்ள சவால்களை வெற்றிகொள்ள இன்று நாம் ஆரம்பிக்கும் இ-ஊக்கம் என்ற வேலைத்திட்டம் உதவும் என்று நான் எண்ணுகிறேன். இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சமூர்த்தி அதிகார சபை, கல்வி அமைச்சு ஆகியவைகளுக்கு இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
இ-ஊக்;கம் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் அடுத்த ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவது ஐஊவுயு நிறுவத்தின் திட்டமாக அமைந்துள்ளது. இந்தத்திட்டத்திற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதோடு, இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இ-ஊக்கம் திட்டத்தை உத்தியோகபூர்வமான முறையில் ஆரம்பித்துவைக்க கௌரவ அமைச்சர் அவர்களின் அழைப்பையேற்று இங்;கு வருகை தந்திருக்கும் எமது இளம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக இளம் சமூகத்திற்கு இந்த இ-ஊக்கம் கணணிக் கல்வியை எடுத்துச்செல்ல பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் வருகை கவர்ச்சிகரமான காரணியாக அமையும் என்று நான் நம்புகிறேன்”
உங்கள் அனைவருக்கும்
இ- ஊக்கத்தின் மூலம் - ஊக்கமே கிடைக்கட்டுமாக



தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையின் வெற்றியைத் தொடர்ந்து இ- ஸ்ரீலங்கா புது முயற்சிக்கு ஜனாதிபதிய

























