
வைத்தியசாலை ஆரோக்கிய தகவல் முகாமைத்துவ முறைமை போன்ற மென்பொருட்கள் இந் நாடு மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் குறிக்கோள்களை அடைவதில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய கூறுகிறார்.
கேகாலையில் கரவணல்ல தள வைத்தியசாலையில் வைத்தியசாலை ஆரோக்கிய தகவல் முகாமைத்துவ முறைமை மென்பொருள் (எச்எச்ஐஎம்எஸ்)
(HHIMS); -Hospital Health Information Management Systems )
அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவுக்கு சமீபத்தில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதற்கான வைபவத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய அமைச்சர், இம் மென்பொருள் மக்களுக்கு சேவை வழங்கலை மிகச் சுமுகப்படுத்துகிறதெனவும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை சுமுகமாக்குவது “மஹிந்த சிந்தனை தொலை நோக்கு'' என்னும் அரசாங்க விஞ்ஞாபனத்தின் பிரதான குறிக்கோளென்றார்.
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் கேதாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ஒருங்கிணைந்து உற்பத்தி செய்துள்ள இம் (எச்எச்ஐஎம்எஸ்) மென்பொருளின் காரணமாக நோயாளிகளின் பராமரிப்பு ஒரு நல்மாற்றத்தைப் பெறும். இதன் காரணமாக நோயாளிகள் வைத்தியசாலையை நாடும் ஒவ்வொரு முறையும் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. நோயாளிகளின் வைத்திய விபரங்களைப் பாதுகாக்கவும் தேவையான விபரங்களைத் தேவையானபடி பார்க்கவும் வசதியை இம் மென்பொருள் கொணரும். கேகாலை மாவட்டத்தில் ; கரவணல்ல, மாவனல்ல, உந்தேகொடை, கிதுல, தெரணியகல ஆகிய ஐந்து வைத்தியசாலைகளில ஆறு மாதங்கள் பரீட்சார்த்த ரீதியில் செய்துபார்க்கப்பட்ட இம் மென்பொருள் தற்போது இலங்கையின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் அமுல்படுத்தத் தயாராகவுள்ளது.
இம் மென்பொருளின் காரணமாக முதற் தடவையாக இலங்கையில் அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்களுக்கு இலகுவாக நோயாளிகளின் வைத்திய விபரங்களை – வைத்தியசாலைக்கு வந்த நாட்கள், நியமிக்கப்பட்ட மருந்துகள், ஒப்பாமைகள் (Allergies) ஆகியவைகளைத் தம் கணினித் திரைகளில் கண்டுகொள்ளலாம். இதற்காக நோயாளி வைத்திருக்க வேண்டியது தனது பதிவு இலக்கத்தை மட்டுமாகும். வைத்தியசாலை மருந்து விநியோகப் பிரிவும்; பரிசோதனைக்கூடமும் நோயாளியின் பதிவு இலத்கத்தின் மூலம் நோயாளியை இனங்கண்டு கணினியின் திரைகளில் காணக் கிடைக்கும் நோயாளியின் இலத்திரனியல் விபரத்திலுள்ளபடி வைத்தியரால் நியமிக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதும் குறிப்பிடப்படட பரிசோதனைகளை நடத்துவதும் இலகுவாக இடம் பெறும். பாவனையாளர்களைக் கவரும் இம் மென்பொருள் நோயாளியின் நோயின் சரியான நிர்ணயம் இலகுவாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும். அத்துடன் கடதாசி பாவனையை பெருமளவாகக் குறைக்கவும் இம் மென்பொருள் ஏதுவாகும். இது மட்டுமன்றி வைத்திய அறிக்கைகளை இலகுவாகத் தயாரிப்பதற்கும் இம் மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். இதன் காரணமாக வைத்திய பணியாளர்களுக்குத் தஙகள் நேரத்தை நோயாளிக்காக அதிகமாக செலுத்தவும் வசதியேற்படும்.



எச்எச்ஐஎம்எஸ் சுகாதார மென்பொருள் மஹிந்த சிந்தனையின் குறிக்கோள்களை அடைவதில் மிகவும் முக்கியமானது


























