
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கடந்த (பெப்பிரவரி ) 26 -28 திகதிகளில் நடாத்திய தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் நிகழ்வில் மாணவ மாணவிகள் பெரும் ஊக்கத்தைக் காட்டியுள்ளனர்.
தொடர்பாடல் தொழில் நுட்பத்துடனான மீள் எழுச்சி என்னும் தொனிப் பொருளுடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கண்காட்சியான ‘யாழ்ப்பாணம் இன்போரெல்’( INFOTEL) கண்காட்சி யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கடந்த மாதம் 26-ந் திகதி ஆரம்பமாகி 28-ந் திகதி முடிவடைந்தது.
இவ்வாறு மூன்று நாட்கள் நடைபெற்ற இவ் நிகழ்வுடன் சமாந்தரமாக இன்பொரெல்லுடன் இணைந்து இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதே நாட்களில் யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் கேட்போர்கூடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்கும் மேற்கூறப்பட்ட செயல் திட்டம் இடம் பெற்றது. இதன் கீழ் 4000க்கு அதிகமான பாடசாலை மாணவர்களுக்குத் தொழில் வழிகாட்டல் வழங்கப்பட்டது. இதற்குத் தயாராக இம் மாதம் 25-ந்திகதி தொழில் வழிகாட்டல் பயிற்சித் திட்டமொன்று நடாத்தப்பட்டது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, தென்மராச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வடமாகாணக் கல்வி அமைச்சின் 13 ஊழியர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தனியார் கைத்தொழில் துறையில் ஈடுபாடுள்ள 11 பேரும் தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை வெளிக்களத்தில் செய்துகொள்ளல் (IT-BPO) [Information Technology Business Process Outsourcing]
தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களான பயிற்சித் திட்டத்தில் பங்குபெற்றனர். 26-ந் திகதி 44 பேர் இத்துறையில் ஆலோசகர்களாகக் கடமையாற்றியதுடன் 27-ந் திகதி 1700க்கு அதிகமான மாணவ மாணவிகள் இவ் வழிகாட்டலில் பங்குபற்றியதாக யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து அறிக்கை தந்த இலங்கைத் தகவல் தொடா;பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய உத்தியோகத்தரொருவர் பகர்ந்தார்.
இம் மூன்று நாட்களுள் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலம் செலவளித்துக் குழுக்கள் குழுக்களாக நடாத்தப்பட்ட கருததரங்கில் தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை வெளிக்களத்தில் செய்துகொள்ளல் பற்றிய விளக்கம் கொடுக்கப் பட்டது. பின்னர் கிட்டத்தட்டத் தனித் தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி அமைச்சினதும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தனியார் கைத்தொழில் துறையினதும் ஆலோசகர்களிடமிருந்து தத் தம் தேவைக்கேற்ப ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந் நிகழ்வில் 9-ம் வகுப்பிலிருந்து – 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சராசரியாக 40 பேர் உட்பட வட மாகாணத்தின் 140 பாடசாலைகளிலிருந்து பங்குபற்றியதுடன் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 87 பாடசாலைகள் பங்குபற்றியதும் வவுனியா மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் மாணவ மாணவிகள் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது. இன்னுமொரு குறிபிடத்தக்க விடயமென்னவென்றால் பங்குபற்றியவர்களுள் தங்கள் வாழ்க்கையிலே கணனியொன்றை இதற்கு முன் கண்டிராதவர்களும் இருந்த அதே வேளையில் பாடசலைகளில் கணனி தொடர்பான பாடத்தைக் கற்ற மாணவ மாணவிகளும் இருந்தமையாகும். ஆனால் இந் நிகழ்வின் முடிவில் எல்லோருக்கும் தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை வெளிக்களத்தில் செய்துகொள்ளல் பற்றிய ஒரு தெளி வான விளக்கமும் வைத்தியத் துறை, கணக்கியல், பொறியியல் போன்ற பாரம்பரியமாக உயர்ந்த துறைகளெனக் கணிக்கப்பட்டு வந்துள்ள துறைகளைப் போல அல்லது அவற்றிலும் மேலான சிறப்பியல்புகள் தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை வெளிக்களத்தில் செய்துகொள்ளல் என்னும் துறையில் உண்டு என்னும் எண்ணமும் ஏற்பட்டதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய சிரேஷ்ட அதிகாரியொருவர் பகர்ந்தார்.



ICTA – வின் தகவல் தொழில்நுட்பம் சார் வர்த்தக நடவடிக்கைகளை வெளிக்களப்படுத்தல் வழிகாட்டலில் யாழ்ப்பாண


























