Information Infrastructure 601-ம் அறிவகம் இன்று பதுளையில் திறக்கபடுகிறது

601-ம் அறிவகம் இன்று பதுளையில் திறக்கபடுகிறது

மின்னஞ்சல் அச்சிடுக PDF

This article also appears in today’s Tamil daily newspaper “Metro News”.

ஆயிரம் அறிவகங்கள் திட்டத்தின் கீழான 601-ம் அறிவகம் இன்று முற்பகல் 9 மணிக்கு பதுளை  செனரத் பறணவிதான நூலகத்தில் அங்கரார்ப்பணம் செய்யப்படும்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைத் கிராமீய மக்களுக்காக எடுத்துச் செல்லும்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையைத் தொடர்ந்தும் பொருளுள்ளவிதத்தில் எடுத்துச் செல்லும் இன்னுமொரு செயலாக இவ்வறிவகம் ஆரம்பிக்கப்படுமென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகிறது.

ஊவா மாகாணத்தின் ஒரேயொரு முதலாம் தர நூலகமாகிய பதுளை செனரத் பறணவிதான நூலகம் இவ் அறிவகத்தின் ஆரம்பத்தின் பின் இப் பகுதி மக்களுக்குப் பெரும் சேவையைப் புரியும் என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர எடுத்துரைக்கிறார்.

இணையத்தள வசதிகள், மின்னஞ்சல் வசதிகள், நிழல்படப்பிரதியெடுத்தல், கணனி வசதிகள்,  தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கமத் தொழில் தகவல் உள்ளிட்ட பல வசதிகளை இவ் அறிவகத்தின் மூலம் மக்களால் பெற்றுக்கொள்ளலாம்.

ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ அவர்களால் இன்று முற்பகல் 9 மணிக்கு நேரும் நன்னிமித்தத்தில் இவ் அறிவகம் அங்குரார்ப்பணம் செய்யப்படும். இத் திறப்பு விழாவில் பதுளை நகராதிபதி சட்டத்தரணி உபாளி நிஸ்ஸங்க உட்பட்ட உச்சகட்ட அதிதிகள் பலர் கலந்துகொள்வர்.

அறிவகம் என்னும் இக் கிராமப்புறத் தகவல் தொழில்நுட்ப மையங்களை நிறுவூம் திட்டம் இ-ஸ்ரீலங்கா மேலெடுப்பின்  கீழ் இடம் பெறுகின்றது. அது உலகின் அதி சிறந்த கிராமப்புற மக்களை மையமாகக்கொண்ட  தகவல் தொழில்நுட்ப மையத்தின் எடுத்துக்காட்டாக விருதுகளைப் பெற்றுள்ளது.

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2010 12:41 )  
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices