Information Infrastructure அதி சிறந்த தொழில்துணிவுள்ளவர்

அதி சிறந்த தொழில்துணிவுள்ளவர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அனுசரணையுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்  சூரிய வௌ பிரதேசச் செயலகத்துக்குள் ஆரம்பித்து நடாத்தப்பட்டுவரும் சூரிய வௌ நெனசள அறிவகத்தின்  உரிமையாளரும் முகாமையாளருமாகிய திருமதி தீபிகா பிரியதர்ஷணிக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில 2009 –ம் ஆண்டின் சேவைத்துறையில்; அதி சிறந்த தொழில்துணிவுள்ளவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட வாணிகச் சபையினால்  இவ்விருதுக்கான சான்றும் சின்னமும் கடந்த மாதம் 15-ந் திகதி அதற்கான விருது விழாவின்போது வழங்கப்பட்டன. இதற்கான தெரிவு மிகக் கடுமையான தேர்வு வழிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட துறைகள் உட்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட ஒரு  தேர்வுக்குழுவின் மூலம் நடத்தப்பட்டதென  இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தகவல்     தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் செயற்திட்ட முகாமையாளர் எஸ் கவஷ்கார் கூறினார்.
பெண்கள் வியாபரத்துறையில் குறைவாக ஈடுபாடுகொள்ளும் அதே வேளையில் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் இவ்வாறான ஈடுபாடு அதிமாகத் தேவைப்படும் இச் சூழ்நிலையில் திருமதி தீபிகா மற்ற சகல பெண்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரிகை என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேறறதிகாரி ரெஷான் தேவபுர தெருவித்தார்.
விருதுக்கான சான்றையும் சின்னத்தையும் ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை உபவேந்தர்  பேராசிரியர் காமினி சேனாநாயக்காவிடமிருந்தும்; ஹற்றன் நெஷனல் வங்கியின் ஹம்பாந்தோட்டைக் கிழையின் முகாமையாளர் எஸ். கே.  ஜயசிங்ஹவிடமிருந்தும் திருமதி தீபிகா பெற்றுக்கொண்டார்.

 

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 06 டிசம்பர் 2010 08:48 )  
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices