எதிர்வரும் 5 வருடங்களில் உலகில் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்தி இணையத்தை நாடுவோரின் எண்ணிக்கை கணனியைப்படுத்தி இணையதளத்தில் பிரவேசிப்போரை விடவும் அதிகம் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசி உள்ளடக்கங்களை விரிவான முறையில் அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தும் தெற்காசிய பிராந்தியத்தின் மாநாடு மற்றும் செயலமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்குடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரெஷான் தேவப்புர உரைநிகழ்த்தினார்.
இந்த M Billion 2010 மாநாடு மற்றும் செயலமர்வு ஜூன் மாதம் 10ம்,11ம் திகதிகளில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம் பெறும். மேலும் ஒருவருடத்தில் தெற்கு ஆசியாவில் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டும் என்று திரு தேவப்புர கூறினார்.
கையடக்கதொலைபேசி மென்பொருள் மற்றும் உள்ளளடக்கத் தயாரிப்பாளர்களுக்கு தமது தயாரிப்புக்களை முன்வைக்க இங்கு பெறுமதியான வாய்ப்புக்கிடைக்கும் என்றும் அதற்காக நடத்தப்பட உள்ள போட்டிக்கான 200 விண்ணப்பப்படிவங்கள் கிடைத்துள்ளதாக திரு தேவப்புர மேலும் கூறினார்.
இலங்கையின் முன்ணணி தொலைபேசி நிறுவனமான எட்டிஸலாட் மற்றும் நாட்டின் பிரதான மென்பொருள் நிறுவனமான ஷெனிட் மொபைல் நிறுவனம் என்பன, மாநாட்டின் மூலோபாய பங்குதாரர்களாக திகழ்கிறார்கள்.



கணனியின் மூலம் இணையதளத்தை நாடுவோரை விட கையடக்கத் தொலைபேசியின் மூலம் இணையதளத்தில் சஞ்சரிப்போர் அதிகம



























