இம்மாதம் 6ம் திகதி முதல் 17 ம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமது தொழில் நடவடிக்கைகளுக்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறை பற்றி ஊடகவியலாளர்களுக்கு பரீட்ச்சாத்த பயிற்சி கிடைக்கும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ஐஊவுயு) தெரிவித்துள்ளது.
பாடநெறியில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் 25 ஊடகவியலாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். உலகில் தலைசிறந்த ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனமான நெதர்லாந்து வானொலியின் உலக சேவைக்கு சொந்தமான நெதர்லாந்தின் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்கும்(RNTC) நிறுவனமாகும்.
இரண்டு வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் நடத்தப்படும் இந்தப்பாடநெறி இலங்கை ஊடகவியலாளர்களுக்குக்கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகும் என்று இலங்;கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்தார்.
இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளினூடாக செய்திகளை வழங்கும் முறை பிரபலமடைந்துள்ள நிலையில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்த பயிற்சியை வழங்குவது முக்கியமானது என அவர் கூறினார்.
துகவல் தொழில்நுட்ப வாய்ப்புக்களை பயன்படுத்துவதில் இருந்து பாரம்பரிய முறையில் ஊடகவியல் நடவடிக்கையில் பணியாற்றுவது சிரமமாக மாறியுள்ளது. இந்த சவால்களை வெற்றிகொள்ள இவ்வாறான பயிற்சிநெறிகள் அவசியம் என்பதோடு இ-ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குவது தமது நோக்கமர்கும் என்று முகவர் நிலையத்தின் தொலைத்தொடர்பாடல் பணிப்பாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்தார்.



இலங்கை ஊடகவியலாளர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்தும் வேலைத்திட்டம்.


























