
அறிமுகம்
- குறிக்கோள்
இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வளர்ந்து வரும் சமூக பொருளாதார அபிவிருத்தியில் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் பங்களிப்பின் வினைத்திறனை எடுத்துக் காட்டுவதாகும். அத்தோடு கிராமிய மக்களுக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சிக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்தல்.
- விபரணை
இலங்கையின் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மகாவிலாச்சிய எனும் ஒரு சிறு கிராமத்திலேதான் இ-கிராமம் எனும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட வளங்களுடனும் இளைஞர்களுக்கு குறுகிய வாய்ப்பையும் கொண்ட இந்த கிராமம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டதினால் மிகவும் பயனடைந்தது. அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்கள், தனி நபர்கள், நிறுவனங்களினால் இளைஞர்கள் சிறந்த ஒரு வாழக்கைத் தரத்தை பெறுவதற்குரிய அறிவைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
தற்போது ICTA இந்த வெற்றியளித்த திட்டத்தை ஏனைய கிராமங்களிலும் அமுல்ப்படுத்துவதற்கு முனைகின்றது. இதற்கு ICTA பங்காளர்களோடு இணைந்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கும் சமூக அங்கத்தவர்களிடையே ஆக்கபூர்வமான சமூக ஒன்றியத்தையும் ஏற்படுத்துவதற்குத் தேவையான சிறந்த வள குழுக்களையும் சேவைகளையும் கொண்டுவரும்.
- பயனடையும் குழு
கிராமிய சமூகங்கள்
- செயற்திட்ட முடிவுகள்
- சிறுவர்கள் மற்றும் வளந்தோர்களுக்கான தகவல் மற்றும் அறிவைப் பெறும் வழிகளின் அதிகரிப்பு.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்பாடுகளில் கிராம மக்களின் ஊக்கமான பங்குபற்றலும் (இ-வாணிபம்,இ-கற்றல்).
- சமூகத்திற்கு பல்ஊடக நூலக சேவைகள்
- அண்மித்த கிராமங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் படிப்படியான பரவல்.
- கிராமிய மட்டத்திலான திறன்மிக்க பயிற்றுனர்கள்.
- செயற்த்திட்டத்தின் நன்மைகள்
தகவலைப் பெறுவதனால் பயனடைந்த கிராமிய சமூகங்கள்.
கெட்டவள
ICTA, LearnAid மற்றும் KRWF உடன் இணைந்த செற்திட்டம்
ICTA, LearnAid மற்றும் KRWF என்பவற்றின் இணைப்பால் கெட்டவளவில் விரைவில் ஒரு ICT மற்றும் ஆங்கில நிலையம் ஒன்று அமைக்கப்படும். அத்திவாரக்கல் வைக்கும் நிகழ்ச்சி ஜனவரி 25ஆம் திகதி நடைபெற்றது. ICTA, LearnAid மற்றும் KRWF என்பவற்றின் பிரதிநிதிகள் இதற்கு சமூகம் அளித்தார்கள்.
இ-இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சியை அமுலபடுத்துவது ICTAஇன் ஒரு கடமையாகும். இவ் ICT மற்றும் ஆங்கில நிலையம் கெட்டவள இ-கிராமத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும்.
இத்துட்டத்தின் குறிக்கோள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பெறும் வழியை விரிவாக்குதலாகும். அத்தோடு தமிழ் சிங்கள மக்களிடையே அதிகரித்த தொடர்பாடலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந் நிலையத்தின் முக்கியமான பயனாளிகள் அப்பிரதேசத்தைச்சேர்ந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்களாகும்.
ICT மற்றும் ஆங்கில நிலையம் கிராம விகாரையினால் வழங்கப்பட்ட 20 பேரச் நிலக்காணியில் அமைக்கப்படவுள்ளது. இவ்விடம் மாவத்தகமவிலிருந்து 6 தூரத்திலும் கெட்டவள பாடசாலைக்கு அண்மையிலும் அமைந்துள்ளது,
கட்டத்தின் கட்டுமானத்திற்கு நிதி Kuwaiti philanthropists வழங்கிய தனிப்பட்ட நன்கொடையை பயன்படுத்தி LearnAid இனால் வழங்கப்படும். ICTA இன் மேற்பார்வையினால் KRFW இத்திட்டத்தை நிர்வகிக்கும்.


























