மின்சட்டங்களையும் கொள்கைகளையும் சாத்தியமாக்குதல்

சட்ட சூழலை சாத்தியமாக்குதல்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மின்சட்டம் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. இலத்திரனியல் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்ளுவதற்கும் தனிப்பட்ட நோக்கத்திற்காகவும் அலுவலக நோக்கத்திற்காகவும் இலத்திரனியல் தரவுகளையும் ஆவணங்களையும் பயன்படுத்துவதற்காக தேவையான சட்ட சூழலை வழங்குகின்றது. இவற்றை விட மின்அரசாங்க பயன்பாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகள் கணினி குற்ற சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த பக்கம் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மின்சட்டம் சம்பந்தப்பட்ட தொடர்புகளையும் தகவல்களையும் வழங்குகின்றது.

இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம்

அரசாங்கத்திலும் மின்அரசாங்க சேவை ஸ்தாபனங்களிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தகுந்த சட்டம் 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டமாகும். பிரதம அமைச்சர், வியாபார, வர்த்தக அமைச்சர் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரின் இணைந்த அமைச்சரவை நிருபத்தின்மூலம் இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்ட வரைவு சாத்தியமானது. அதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்கள் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டவாக்கம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இணைந்து சட்டவரைஞர் திணைக்களம் தயாரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். அதன்படி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கொள்கை மற்றும் சட்ட உள்ளீடுகளுடன் சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டவாக்கம் தயாரிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் 2007 ஒக்ரோபர் 1ஆம் திகதி முதல் வலுவில் இருக்குமாறு செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. (2007 செப்டம்பர் 27ஆம் திகதியிட்ட 1516/25ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியை பார்க்கவும்).

2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் ஐக்கிய நாடுகள் வர்த்தக சட்டம் (UNCITRAL) இலத்திரனியல்பற்றிய மாதிரி சட்டம் (1966) மற்றும் இலத்திரனியல் கையொப்பங்கள் பற்றிய மாதிரி சட்டம் (2001) என்பவற்றின் தரங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

சட்டத்தின் நோக்கம் பின்வருமாறு அமைகிறது

• சட்ட தடைகளை அகற்றி சட்ட நிலையான தன்மையை ஸ்தாபித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச இலத்திரனியல் வர்த்தகத்திற்கு வசதிப்படுத்துதல்
• நம்பத்தகுந்த வடிவத்திலான இலத்திரனியல் வர்த்தக பயன்பாட்டுக்கு தூண்டுதலளித்தல்
• இலத்திரனியல் தொடர்பாடல் மற்றும் தரவு செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஒருங்கிணைத்தல், அதிகாரம் என்பவற்றில் பொதுமக்களுக்கிருக்கும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்
• நம்பத்தகுந்த வடிவத்திலான இலத்திரனியல் தொடர்பாடல் என்பவற்றின் அடிப்படையில் அரசாங்க சேவைகளை வழங்குவதை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்துடன் ஆவணங்களை இலத்திரனியல் கோவைப்படுத்தலுக்கும் வசதியளித்தல். இது இலத்திரனியல் தொடர்பாடல் சிறந்த தொடர்பாடல் என்றவகையில் அதிகாரபூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தரவுகளையும் தகவல்களையும் இலத்திரனியல் வடிவத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு இலத்திரனியல் என்ற வகையில் சேவைகளை வழங்குவதற்கு அரச நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தை சட்டவாக்கமாக்கியதன் தொடர்செயலாக, சர்வதேச ஒப்பந்தங்களில் இலத்திரனியல் தொடர்பாடலைப் பயன்படுத்துவது தொடர்பில் (பொதுவாக மின்-ஒப்பந்த சமவாயம் என அறியப்படுகிறது) ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் கையொப்பமிடுவதற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள முதல் மூன்று நாடுகளில் (தெற்காசியாவில் முதல் நாடு) இலங்கையும் ஒரு நாடாக இருக்கிறது. இது விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் விளைவாக இடம்பெற்றதாகும்.

சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பில் இலத்திரனியல் தொடர்பாடல் பயன்படுத்தப்படுகின்றபோது சட்ட ஸ்திரத்தன்மையையும் வர்த்தக எதிர்வுகூறலையும் மேம்படுத்துவதை இந்த சமவாயம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இது இலத்திரனியல் சூழலில் ஒரு தரப்பின் அமைவிடத்தை உறுதிப்படுத்துகிறது; இலத்திரனியல் தொடர்பாடலைப் பெறுகின்ற மற்றும் விநியோகிக்கின்ற இடம் மற்றும் நேரம், ஒப்பந்த உருவாக்கத்திற்கான தானியங்கி செய்தி முறைமையைப் பயன்படுத்துதல்; மற்றும் கையினால் எழுதப்பட்ட கையொப்பங்கள் மற்றும் இலத்திரனியல் அதிகாரமளிக்கும் முறை என்பவற்றிற்கு இடையில் – “மூல” கடுதாசி ஆவணங்கள் உட்பட – இலத்திரனியல் தொடர்பாடலுக்கும் கடுதாசி ஆவணங்களுக்கும் இடையில் செயற்பாட்டு சமநிலையை உருவாக்குவதற்கான அளவுகோள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இன்னுமொரு தொடர்செயல் நடவடிக்கை என்ற வகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் சரியான தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்க நிறுவனஙடகளுக்கும் பிரசைகளுக்கும் டிஜிட்டல கையொப்பங்களை வழங்குவதை சான்றுப்படுத்தும் அதிகாரத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
கணினி குற்றங்கள்

2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டம் கணினி குற்றங்களை அடையாளம் காண்பதற்கும் அத்தகைய குற்றங்களை வலுவில் இருப்பதை புலனாய்வுசெய்வதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கை முறைகளுக்கு உறுதியளிக்கிறது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு 2005 ஆகஸ்ட் 23ஆம் திகதி விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற “பீ” நிலையியற் குழுவினால் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டது. அது 2007 மே மாதம் சட்டவாக்கமாக வலுவில் கொண்டுவரப்பட்டதுடன் 2007 யூலை 9ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரால் சான்றுப்படுத்தப்பட்டது.

2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டத்தின் அடிப்படை அதிகாரமின்றி கணினிக்குள், கணினி நிகழ்ச்சித்திட்டத்திற்குள், தரவுகள் அல்லது தகவல்கள் என்பற்றிற்குள் பிரவேசித்தலை குற்றமாகக் காண்பதாகும். அத்துடன் குற்றம் புரிந்தவருக்கு கணினிக்குள் பிரவேசிக்க அதிகாரமிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரமற்ற கணினி பாவணை சம்பந்தமாக செயலாற்றுவதற்கும் அதில் ஏற்பாடுகள் இருக்கின்றன.

இந்த சட்டம் அதிகாரமற்ற சீர்படுத்தல்கள், தகவல்களை மாற்றுதல் அல்லது அழித்தல் மற்றும் கணினி பிரவேசத்தை மறுத்தல் என்ற வகையில் எந்த ஒரு நபரும் கணினி நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைப்பதால் அதிகாரம் உள்ள நபருக்கு கணினிக்குள் பிரவேசிக்க தடை ஏற்படுதல் என்பவற்றை குற்றமாகக் காண்கிறது. இந்த சட்டத்தில் முன்மொழியப்பட்ட ஏனைய குற்றங்களாக ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு தரவுகளை அல்லது தகவல்களை மாற்றுகின்றபோது வைரஸ்களையும் தர்க்க குண்டுகள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தி கணினியை சேதப்படுத்துவது அல்லது தீங்கு விளைவிப்பது, அதிகாரமின்றி தகவல்களை பிரதிபண்ணுதல், அதிகாரமின்றி கணினி சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் கணினி நிகழ்ச்சித்திட்டத்தில் குறுக்கீடு செய்தல் என்பவை குற்றங்களாகக் காணப்படுகின்றன.

இந்த சட்டம் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்துகிறது. கணினி குற்றங்களை புலனாய்வு செய்கின்றபோது பொலிசாருக்கு உதவுவதற்கு “நிபுணர்கள்” குழாம் ஒன்றை நியமிப்பதற்கு இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தரவுகளைப் பாதுகாத்தல்
பல கம்பெனிகளுக்கு, குறிப்பாக இணையத்தளத்தை செயற்படுத்துகின்ற கம்பெனிகளுக்கு தனிப்பட்ட தரவுகள் என்பது குறிப்பிடத்தக்க சொத்தாக இருக்கின்றது. எனவே தகவல் காலத்தில் தரவு பாதுகாப்பு சட்டங்கள் என்பது முக்கியமான சட்ட ஆளுகையாக மாறியுள்ளது. எவ்வாறாயினும், உலக பொருளாதாரத்துடன் இணைந்ததாக, தேசிய தரவுப் பாதுகாப்பு சட்டங்கள் இலகுவாக மீறப்படக்கூடியவைகளாக இருப்பதோடு, நியாயாதிக்கத்திற்கு வெளியில் தரவுகளை மாற்றுகின்றபோது தரவுகள் காணாமற் போவதனால் பிரசைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. அத்தகைய மீறல்களை தடுக்கும் முயற்சியாக, இலங்கையைப் போன்று ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகளுக்கு தனிப்பட்ட தரவுகளை மாற்றுகின்றபோது கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் தரவுப் பாதுகாப்பு ஆளுகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அரசாங்கம் 2003ஆம் ஆண்டின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளின் மூலம் நியதிச்சட்ட நிபந்தனையில் குறியீட்டை வைக்கக்கூடிய சாத்தியம்பற்றி, தனியார்துறையை உள்ளடக்கி, செயலற்றுகைக்கான தரவு பாதுகாப்பு குறியீட்டை ஏற்றுக்கொள்ளுவதை அடிப்படையாகக்கொண்டு ஒரு கொள்கையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில்; இந்த அணுகுமுறையை சுய – அல்லது – இணைந்த-ஓழுங்குமுறைப்படுத்தும் அணுகுமுறையாக காண முடியும். (பிரிவு 0103ஐப் பார்க்கவும்)

புலமைச் சொத்து உரிமை (IPR)

புலமைச் சொத்து உரிமையை (IPR) பாதுகாப்பது சம்பந்தமாக, 1979ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க புலமைச் சொத்து குறியீட்டு சட்டம் 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டமாக கொண்டுவரப்பட்டது. 2003ஆம் ஆண்டின் புலமைச் சொத்து சட்டத்தில் மென்பொருள், வியாபார இரகசியங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகள் என்பவற்றுடன் தொடர்புள்ளவற்றைப் பாதுகாப்பதற்காக பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (விபரங்களுக்கு இந்த ஆவணத்தின் 0204 மற்றும் 0205 என்பவற்றைப் பார்க்கவும்)

கீழே இலங்கை அரசாங்கத்தின் மின்சட்டங்கள் மற்றும் கொள்கைகள் என்பவற்றுடன் தொடர்புடைய சட்டங்கள், ஒழுங்குவிதிகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள் தரப்பட்டுள்ளன.

மின்அரசாங்கத்தின் பிரதான நோக்கம் அரசாங்கத்தின் வினைத்திறனையும் பயனுறுதியையும் மேம்படுத்துகின்ற அதேவேளையில் பிரசைகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதாகும். ஒழுங்காகவும் ஒரேவிதமாகவும் மின்அரசாங்கத்தை அமுல்படுத்துவதற்காக 2009ஆம் ஆண்டில் மின்அரசாங்க கொள்கை உருவாக்கப்பட்டு அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அமைச்சரவை அமைச்சர்கள் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம், அனைத்து அரசாங்க நிறுவனங்களும் மின்அரசாங்க கொள்கையை அமுல்படுத்துவதோடு அதை இணங்கியொழுகவும் வேண்டும். மேலும் இந்தப் பக்கம் மின்அரசாங்கத்திற்கு ஓர் அறிமுகத்தை வழங்குகிறது. மின்அரசாங்க கொள்கை தொடர்பான ஆவணங்களும் தகவல் பாதுகாப்பு கொள்கையும் பதிவிறக்கம் செய்வதற்காக கிடைக்கிறது.

மின்அரசாங்கத்திற்கான அறிமுகம்

விரிவான மின்அரசாங்க கொள்கையை இணங்கியொழுகும் சரிபார்க்கும் பட்டியல்

Presidential circular issued on implementation of eGovernment Policy

தகவல் பாதுகாப்பு கொள்கையின் உள்ளடக்கம்

விரிவான தகவல் பாதுகாப்பு கொள்கை

மின்அரசாங்க கொள்கையுடன் தொடர்புடைய மேலதிக வளங்களுக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய இணையத்தளத்தின் மின்அரசாங்க கொள்கை கருத்திட்ட பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.

மின்அரசாங்க கொள்கை

இலங்கையின் முதலாவது மின்அரசாங்க கொள்கை 2010 – 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் செயற்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்ளுவதற்கும் 2009 டிசம்பர் மாதம் அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதை அமுல்படுத்துவதை கண்காணிப்பதற்கும், தேவைப்பட்டால் கொள்கையை மீளாய்வுசெய்வதற்கும் திருத்துவதற்கும் அமைச்சரவை அமைச்சர்களால் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு பணிப்பாணை வழங்கப்பட்டது. இந்த முகவர் நிலையம் கொள்கையின் உள்ளடக்கத்தைப்பற்றி விழிப்புணர்வூட்டுவதற்காகவும் அமுல்படுத்துவற்காகவும் மீளாய்வுசெய்வதற்காகவும் நாடளாவிய ரீதியில் அரசாங்க முகாமையாளர்களை தொடர்புபடுத்தி தொடர் மகாநாடுகளையும் செயலமர்வுகளையும் நடத்தியது. மின்அரசாங்க கொள்கை அமுலாக்கத்தின் முன்னேற்றம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் இணையத்தளத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் 2010, 2011, 2012, மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மின்அரசாங்க கொள்கை அமுலாக்கத்தின் வருடாந்த மீளாய்வை மேற்கொண்டது. பங்கேற்பு நிறுவனங்களுடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் முயற்சிகளை மேற்கொண்டாலும் அரசாங்க நிறுவனங்கள் மின்அரசாங்க கொள்கையை அமுல்படுத்திய வீதம் மிகமிகக் குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மிகக் குறைவான அமுலாக்கத்திற்கான காரணங்களை பகுப்பாய்வுசெய்து பின்வரும் தீர்மானங்களை பங்கீடுபாட்டாளர்களுடன் இணைந்து தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் எடுத்துள்ளது.

• மின்அரசாங்க கொள்கை மிக சிக்கலான கொள்கை தேவைகளைக் கொண்டுள்ளது.
• கொள்கை மிகவும் நீண்டது. இதில் 29 கொள்கை கூற்றுகளும் 177 கொள்கை வழிகாட்டல்களும் இருக்கின்றன. இவற்றை வேறுபட்ட மின்அரசாங்க முதிர்ச்சி நிலைகளைப் பொருட்படுத்தாது அனைத்து மின்அரசாங்க நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருந்தது,
• கொள்கையை அமுலாக்குவது தொடர்பில் தெளிவான பொறுப்புகள் அறிமுகப்படுத்தப்படருக்கவில்லை.
• பொதுவாக இக்கொள்கையை அமுலாக்குவதற்கு பொறுப்பளிக்கபட்டுள்ள பிரதான புத்தாக்க அதிகாரிகளுக்கு (CIOs) அதை எப்படி செய்வது என்ற தெளிவான கருத்து இருக்கவில்லை. மேலும் பிரதான புத்தாக்க அதிகாரிகளுக்கு இவற்றை அமுலாக்கும் அதிகாரமில்லை.
• அரசாங்கத்திற்கு அவர்கள் இதை ஏன் அமுல்படுத்த வேண்டும் என்ற தெளிவில்லை. (கொள்கை நோக்கம் தெளிவாக இல்லை)

மின்அரசாங்க கொள்கை மீளாய்வு குழு

கொள்கையின் மீள் திருத்தப்பட்ட ஆவணத்தை வரைவுபடுத்துவதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் மின்அரசாங்க கொள்கை மீளாய்வு குழு அங்கத்தினர்களை நியமித்துள்ளார்.

கொள்கை மீளாய்வு குழு தேவைப்படும்போது கொள்கையை இற்றைப்படுத்துவதற்கும் மீளாய்வுசெய்வதற்கும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை அணுகும் பயணத்தில் ஈடுபட்டுள்ளது. கொள்கை கூற்றுக்களை தொகுப்பதற்கும் குழுவுக்கு வழிகாட்டுவதற்கும் ஏனைய நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அத்தகைய தேவைகளை உள்ளடக்கி கொள்கையின் முதல் பகுதியில் குழு ஆராய்ந்துள்ளது.

இந்த குழு ஒரு புதிய தொனிப்பொருளுக்கு உடன்பட்டது. அத்துடன் 10 கொள்கை நோக்கங்களை வரைவுபடுத்தியது. அதன் கீழ் 32 கொள்கை கூற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த குழு கொள்கை வழிகாட்டலை வரைவுபடுத்துவதற்காக செயற்குழுவொன்றை நியமித்துள்ளது. மின்அரசாங்க கொள்கை செயற்குழு கொள்கை வழிகாட்டலை வரைவுபடுத்தியுள்ளது. RACI அளவீட்டைப் (பொறுப்பு, நம்பகத்தன்மை, ஆலோசனை பெறப்பட்டது, அறிவிக்கப்பட்டது) பயன்படுத்துவதன் மூலம் கொள்கை வழிகாட்டலின் பொறுப்புகளை இனம் காண்கின்றது.

மேலும் செயற்குழு கொள்கைத் தேவைகளை அமுலாக்குவதற்கு அரசாங்க நிறுவனங்களை அணுகுவதற்கான அணுகுமுறையை அடையாளம் காண்கிறது. அத்துடன் அவர்களின் அமைப்புகளின் முதிர்ச்சியடைந்த மின்அரசாங்க மேடையையும் அடையாளம் காண்கின்றது.

ஆலோசணை நடவடிக்கைமுறை

கொள்கை வரைவுபடுத்தப்பட்டவுடன் அது அரசாங்க பிரதான புத்தாக்க அதிகாரிகளுக்கு (CIOs), அரசாங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர்களுக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொள்ளாத தனியார் துறை முகாமையாளர்கள், கல்விமான்கள் மற்றும் சிவில் சமூக அங்கத்தினர்கள் ஆகியோருக்கு விரிவான ஆலோசனையை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றைவிட பொதுமக்களின் ஆலோசனை கோரப்பட்டதுடன் வெகுசன ஊடகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கொள்கையை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பெறப்பட்டது.

சரிபார்க்கும் பட்டியலைப் பயன்படுத்துவதன்மூலம் கொள்கை எப்படி அமுலாக்கப்பட வேண்டும்.
அமுல்படுத்துவதை வசதிப்படுத்துவதற்காகவும் அதன் வெற்றியை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு அறிவிப்பதற்காகவும் செயற்குழு கொள்கை அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியலொன்றைத் தயாரித்துள்ளது.

மேலும் மின்அரசாங்க முதிர்ச்சிநிலையைப் பயன்படுத்துவதன்மூலம் கொள்கையை அமுலாக்குவதற்கு செயற்குழு ஓர் இலகுவான அணுகுமுறையை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளது.

அடையாளம் காணப்பட்ட அணுகுமுறையை பின்பற்றும்போது, அரசாங்க நிறுவனங்களுக்கு அவர்களின் மின்அரசாங்க முதிர்ச்சிநிலையை அடிப்படையாகக் கொண்டு கொள்கை தேவைகளைப் பார்க்க முடியும். உதாரணமாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனமும் மின்அரசாங்கத்தின் ஆகக் குறைந்த முதிர்ச்சி நிலையிலுள்ள “தகவல்” நிலையுடன் தொடர்புபட்ட மின்அரசாங்க கொள்கை தேவைகளை அமுலாக்குவதை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் “தகவல்” நிலையுடன் தொடர்புபட்ட மின்அரசாங்க கொள்கை தேவைகளை அமுலாக்கியவுடன், “இடைச் செயற்பாடு” என்ற அடுத்த கட்டத்துடன் தொடர்புபட்ட கொள்கை தேவைகளை அமுலாக்குவதை ஆரம்பிக்க முடியும். ஏதேனும் ஒரு நிறுவனம் முதல் கட்டத்துடன் தொடர்புடைய தேவைளில் குறைந்தபட்சம் 70%ஐ செயற்படுத்தாவிட்டால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறக்கூடாது. எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் “இடைச் செயற்பாடு” என்ற கட்டத்துக்கு அப்பால் செல்ல முடியாவிட்டால் அவர்கள் “இடைச் செயற்பாடு” என்ற கட்டத்தில் இருப்பதாக நாம் அடையாளம் காண்கிறோம்.

எவ்வாறாயினும் அவர்கள் உயர் கட்டத்துடன் சம்பந்தப்பட்ட தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார்களா என்பதை பரிசீலித்துக்கொள்ள முடியும். அதற்கு அமைவாக அவர்கள் அமுலாக்க சரிபார்க்கும் பட்டியலில் குறித்துக்கொள்ள முடியும்.

கொள்கை அமுலாக்கத்தின் மதிப்பீடு
அரச நிறுவனங்களால் மின்அரசாங்க கொள்கை அமுலாக்கப்படுவதை உறுதிப்படுதிக்கொள்ளுவதற்கும் மதிப்பீடுசெய்வதற்கும் “கொள்கை அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியல்” பயன்படுத்தப்படும். அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியல் அரச நிறுவனங்கள் கொள்கை அமுலாக்கலை நிரூபிக்கின்ற ஆவணத் தொகுப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிபார்க்கும் நடவடிக்கை முறைக்கு தேவைப்படுகின்ற அனைத்து படிவங்களையும் விபரக்கொத்துக்களையும் கொள்கை அணி தயாரிக்கிறது.
ஒவ்வொரு நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நிறுவனத்தின் கொள்கையை இணங்கியொழுகும் வீதத்தை மதிப்பீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இணங்கியொழுகும் வீதம் மதிப்பீடு செய்யப்பட்டதன் பெறுபேறு வெளியிடப்படும். அத்துடன் அத்தகைய நிறுவனங்களின் இணங்கியொழுகும் வீதத்தை பிரசைகள் அறிந்துகொள்ளுவதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.

2009.12.15ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்களால் மின்அரசாங்க கொள்கை அங்கீகரிக்கப்பட்டது

டிஜிட்டல் அரசாங்க கொளகைகள் மற்றும் நடவடிக்கைமுறைகள் வரைவு

Top