கணினி குற்றம் பற்றிய புடாபெஸ்ட் உடன்பாட்டில் சேர இலங்கைக்கு அழைப்பு – இக்டா

December 2, 2015

கணினி குற்றம் பற்றிய புடாபெஸ்ட் உடன்பாட்டில் சேர இலங்கை அழைக்கப்பட்டுள்ளதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) கூறுகிறது. இவ் உடன்பாட்டில் சேருமாறு இவ்வாறு அழைக்கப்படும் கௌரவத்தைப் பெற்ற முதல் தெற்காசிய நாடு இலங்கையாகும். ஐரோப்பிய சபையின் பொதுச்செயலாளிரானல் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்குச் சமீபத்தில் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய சபையின் அமைச்சர் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றின் பிரதிபலனாகும்.

கணினி குற்றம் பற்றிய புடாபெஸ்ட் உடன்பாடு கணினி குற்றம் பற்றிய ஐரோப்பிய சபையின் உடன்பாடு எனவும் அழைக்கப்படுகின்றது. தேசிய சட்டங்களை ஒருங்கிணைப்படுத்துதல், விசாரணை செய்யும் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் இணையம் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பாக ஆவன செய்ய முயல்தல் என்னும் விடயங்கள் பற்றி முழு உலகிலுமுள்ள ஒரே ஒரு சர்வதேச ஒப்பந்தம் இதுவாகும். இது ஐரோப்பிய சபையினால் பிரான்சின் ஸ்ராஸ்பர்க் நகரத்தில் திட்டமிடப்பட்டு 2001 நவம்பர் 8ந் திகதி ஐரோப்பிய சபையின் அமைச்சர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது 2001 நவம்பர் 23-ந் திகதி கையொப்பத்துக்காக 2001 நவமபர் 23-ந் திகதி ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டில் திறந்துவைக்கப்பட்டது. இது முதன் முதலாக செல்லுபடியாதல் ஆரம்பித்தது 2004 ஜுலை 1-ம் திகதியாகும்.

கனடா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா மற்றும் தென் ஆபிர்க்கா ஆகிய நாடுகளினால் 2001 நவம்பர் மாதம் 23 திகதி கைச்சாத்திடப்பட்ட இவ் உடன்பாடு 2014 ஒக்டோபரில் 44 நாடுகளின் உறுதிப்படுத்துதலைப் பெற்றிருந்தது..

ஐரோப்பிய சபையின் கணினி குற்றம் மற்றும் தரவுகள் பாதுகாப்பு பகுதியின் முதல்வர் அலெக்சான்றர் சேகர் இவ் உடன்பாட்டுடன் இணையுமாறு இலங்கைக்குக் கிடைத்துள்ள அழைப்பைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “கணினி குற்றம் தொடர்பான புடாபெஸ்ட் உடன்பாடானது அதனை அமுல்படுத்த விரும்பும் ஐரோப்பிய நாடுகளைத் தவிர்ந்த நாடுகளால் கூட உடன்படுவதற்கு திறந்துள்ள ஐரோப்பிய உடன்பாடாகும். ஐரோப்பிய நாடுகள் மற்றுமல்ல, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், டொமினிகன் குடியரசு, மொறிஷியஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே இவ் உடன்பாட்டில் பங்கு வகிக்கின்றன. ஆர்ஜன்டீனா, கோஸ்டா றீகா, மெக்சிகோ, மொறொக்கோ, செனகல், தென் ஆபிரிக்கா, மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் இவ் உடன்பாட்டுக்குக் கைச்சாத்திட்டுள்ளன அல்லது உடன்படுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையும் அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளும் இலங்கையின் முன்மாதிரிகையைப் பின்பற்றி கணினி குற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பில் முற்றாக ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.”

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் மைல்கல் வகையிலான இவ் கொள்கை வெற்றியைப் பற்றித் தமது கருத்தை இக்டா தலைவர் சித்ராங்கனி முபாரக் கீழ்கண்டவாறு கூறினார்: “இவ் வகையான ஐரோப்பிய உடன்பாடொன்றில் சேருதல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை சர்வதேச அரங்கில் எவ்வாறு கணிக்கப்படுகிறதென்ற ரீதியில் இலங்கைக்கு ஒரு மா பெரும் ஊக்குவிப்பாகும்”.

இலங்கை இவ் உடன்பாட்டில் சேருவதினால் ஏற்படும் நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டிய இக்டாவின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் மற்றும் நீதி ஆலோசகர் ஜயந்தா பர்ணாந்து பின்வருமாறு கூறினார்: “இவ் உடன்பாட்டில் சேருதல் கணினிக்குற்றங்களைப் பரிசீலிப்பதில் சித்தியை எய்துவதற்கு பெருமளவில் உதவும். தவிர அது சர்வதேச மட்டத்தில் நீதியை அமுல் படுத்துவதிலும் நீதி தொடர்பான ஒத்துழைப்பிலும் உதவியளிக்கும். அத்தோடு விசாரணை வழிமுறையில் மனித உரிமைகள் பற்றிய பாதுகாப்பையும் உறுதிபடுத்தும்”.

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தலைமை நிறுவனமாகும். 2003-ம் ஆண்டின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம் இலக்கம் 27-ன் உறுப்புரையின் படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான அரசாங்க கொள்கை மற்றும் செயலாற்றல் திட்டத்தை அமுல்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ‘இக்டா’ கடமைப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் 6-ம் பிரிவின் உறுப்புரையின் படி, ‘இக்டா’ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்குவதற்கு அமைச்சரவைக்கு உதவியளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளது. ‘இக்டா’ முழுமையாக இலங்கை அரசாங்கத்துக்கு உரித்தானது.

எங்கள் குடும்பம் ஒரு பகுதியாக

Top