குடிமக்களுக்கு அதிக ‘இலவச வை-பை’ வழங்க அரசு தயார்

March 4, 2015

இக்டா‘ இலங்கையிலுள்ள சகல தொலைத்தொடர்பாடல் செயலாற்றுநர்களின் அனுசரணையுடன் இலவச வை-பை’ என்றும் அழைக்கப்படும் ‘இணைய இணைப்பு – ஒரு குடிமகனின் உரிமை’ என்ற நிகழ்ச்சித்திட்டத்துக்கு முன்னிலை வகித்து அதனை அமுல் படுத்தியது.

இவ் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் இலங்கை குடிமக்கள் பல தேவைகளுக்காக இணையத்தை அடைவதை இலகுவாக்குவதாகும். குடிமக்களை அரச கொள்கை தயாரித்தல் மற்றும் நல்லாடசிக்கு பங்களித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுத்தக் குடிமக்களை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்தது. குடிமக்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பிட்ட இடங்களில் ‘இலவச வை-பை’ வழங்கப்படும். இவற்றுள் முதல் 250 இடங்கள் 2015 மார்ச் 31-ந் திகதிக்கு முன் நிறுவப்படும். ஏனைய 750 இடங்கள் 60வது 90 நாட்களில் பூர்த்திசெய்யப்படும்.

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா எதிர்வரும் 30து 90 நாட்களில் 1000த்துக்கும் அதிகம் இடங்களில் ‘இலவச வை-பை’ வழங்கல் ஒரு வெறும் தேர்தல் வாக்குறுதியை பூர்த்தி செய்தல் மட்டுமல்ல என்றார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வாழ்க்கையின் அனைத்துத் தரப்பினரும் ‘இலவச வை-பை’ நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து நன்மை பெறுவார்கள் என்றார்.

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தில் (இக்டா) இடம்பெற்ற ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றி கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மிகவும் துரிதமாக மாறுபடும் தற்போதைய உலகில் இணைய வசதிகள் ஒரு சொகுசு சாதனமல்ல, அது தண்ணீர், மின்சாரம், எரிவாயு போன்ற அடிப்படை வசதியொன்று மட்டுமேயாகும் என்றார். தற்போதைய அரசாங்கம் தனது முதல் திட்டத்தை மாற்றி அதி வேகத்துடனான ‘வை-பை’ வசதிகளை அதிக இடங்களுக்கு வழங்க தீர்மானிக்க காரணம் இதுவே என அவர் கூறினார்.

1983-ல் முதன் முதலாக பாடசாலை மட்டத்தில் கணினி கல்வியைப் பெற்ற மாணவர் குழுவின் அங்கத்தவரொருவர் என்ற வகையில் கடந்த காலத்தை நினைவுகூர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் எடுத்த, கிராமப்புறப் பகுதிகளில் கணினி வசதி மையங்களை நிறுவுதல் மற்றும் இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் பிரதிபலனாக தனக்கு மேற்கூறப்பட்ட சந்தர்ப்பம் கிடைத்த்தெனக் கூறினார்.

கௌவர வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் மங்கள சமரவீர சகல தொலைபேசி கம்பனிகளும் இவ் இலட்சிய பயணத்தின் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்றும் நாடு டிஜிட்டல் யுகத்தில் பங் கெடுப்பது பற்றிப் பெருமிதம் அடையவேண்டும் என்றும் பிரேரித்தார்.

இணையம் உண்மையாக மக்களின் நுகர்வு உரிமையாக அமைவதற்கு நாம் இன்னும் மிகத் தூரம் செல்லவேண்டும் இலவசமாக ‘வை-பை’ வசதிகளை வழங்கல் அக் கட்டத்தை அடைவதற்கான ஆரம்பம் மட்டுமே என பிரதி அமைச்சர் கூறினார்.

நாட்டின் சகல முக்கிய நகரங்களிலும் இணைய வசதிகளை வழங்கும் ‘வை-பை’ வலயங்களை அமைத்தல் தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் சனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளிலொன்றாகும்.-

இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த இக்டா தலைவர் சித்ராங்கனி முபாரக் பின்வருமாறு கூறினார்: “நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஊடுருவல் என்னும் இக்டாவின் ஒரு முக்கிய குறிக்கோளைப் பூர்த்தி செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறைகளிலுள்ள சமூக ஒற்றுமை ஏதுவாகியதென்பது மிகுந்த பெருமிதத்துக்கு காரணமாகும். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பாரியவிதத்தில் நடைமுறைப்படுத்துதல் இடம்பெற்றதையிட்டு நான் வியப்படைகிறேன். இதிலிருந்து இப்படியான பணிகளை வழங்க இந்த பங்காளித்துவத்தின் உண்மையான நன்மை கடந்த காலத்தில் கற்பனைசெய்யக் கூட முடியாதிருந்தது என்பதுதெளிவாகிறது. நான் இந்த செயற் திட்டத்தின் பங்காளிகளுக்கு நன்றி கூறுகிறேன்”

இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகக் கருத்துத்தெரிவிக்கையில் ‘இக்டாவின்’ முகா மைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்றதிகாரி முகுந்தன் கனகெ 60வது 90 நாட்களில் இவ்விதமான தொலைத்தொடர்பாடல் பாரியசெயலை இக்டா முன்னிலை வகித்து நிறைவேற்றியமை ஒரு இலட்சிய கனவாகும். தொலைத்தொடர்பாடல் செயாலற்றுநர்கள் இக்டாவினதும் தொலைத் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணைக்குழு (ரீ. ஆர். சீ.) யினதும் குழுக்களுடன் சேர்ந்து இவ் இலட்சியமான மற்றும் வைராக்கியமான முன்முயற்சியை நடைமுறைப்படுத்தினர்.

சகல தொலைத்தொடர்பாடல் செயலாற்றுநர்களும் சேர்ந்து இறுதிப்படுத்தப்பட வேண்டிய பல தொழில்நுட்ப மற்றும் இடை அணிவகுப்புதொடர்பான விடயங்கள் இருந்தன. ஆனால் சகல பங்காளிகளும் மனப்பாங்கு நேர்மறையானதாக இருந்தது. இதன் காரணமாக அரசாங்கம் கடந்த தேர்டதலின்போது அளித்த வாக்குறுதிக்கும் அதிகமான வகையில் பூரிப்பை வழங்குவதற்கு இக்டாவிற்கு முடிந்தது.

மேலும் கருத்துத் தெரிவித்த ‘இக்டாவின்’ முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்றதிகாரி தொழில்நுட்ப மற்றும் கொள்கை தொடர்பான பல விடயங்கள் கவனத்துக்கு எடுக்கப்படவேண்டியிருந்தன என்றார். அதிகப்படியான பொது மக்களுக்கு பயன்படுத்த வசதியான இடங்களை நிர்ணயிப்பது இவ் விடயங்களில் ஒன்றாயிருந்ததென்றார்.

இவ் இடங்கள் சகல அரசாங்க பல்கலைக்கழகங்கள், குறிப்பிடப்பட்ட தொழில் கல்வி நிறுவனங்கள், சகல புகையிரத நிலையங்கள், மத்திய பஸ் தரிப்பு நிலையங்கள், ‘ஏ’ தர தள வைத்தியசாலைகள், பொது மக்கள் பூங்காக்கள், பொது மக்கள் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், குறிப்பிடப்பட்ட, அரச அலுவலகங்கள், ஆகியவற்றுக்கு இலவச ‘வை-பை’ வசதிகளை வழங்கும் என்ற சம்மதத்துக்கு குழுக்கள் வந்தனர். சகல மாவட்டங்களுக்கும் இலவச ‘வை-பை’ வசதிகள் விகிதாசாரமாக வழங்கப்படும். ஆரம்ப வரையறை ஒரு குடியாளிக்கு மாதத்துக்கு 100 எம்பீ ஆக அமையும். அது 512 கே.ம்பீ.பீ.எஸ். வேகத்தில்செயல்படும்.

தெற்காசியாவில் இவ்விதமான முன்னெடுப்பை இவ்வளவு குறுகிய காலத்தில் முதன் முதலாக அமுல்படுத்திய நாடுகளில் இலங்கை ஒன்றாகும்.

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தலைமை நிறுவனமாகும். 2003-ம் ஆண்டின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம் இலக்கம் 27-ன் உறுப்புரையின் படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான அரசாங்க கொள்கை மற்றும் செயலாற்றல் திட்டத்தை அமுல்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ‘இக்டா’ கடமைப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் 6-ம் பிரிவின் உறுப்புரையின் படி, ‘இக்டா’ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்குவதற்கு அமைச்சரவைக்கு உதவியளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளது. ‘இக்டா’ முழுமையாக இலங்கை அரசாங்கத்துக்கு உரித்தானது.

எங்கள் குடும்பம் ஒரு பகுதியாக

Top