இலங்கை குடிமக்களுக்கு இலவச வை-பை அறிமுகம்

March 30, 2015

இலங்கை 90 நாட்களில் இலவச வை-பை வசதிகளை வழங்கி தெற்காசிய நாடுகளில் முதன் முதலாக வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (இக்டா), தொலை தொடர்பாடல் முகவர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கூட்டிணைப்பில் 30 மார்ச் 2015 அன்று கொழுப்பு கோட்டை, யாழ்ப்பாணம், மாத்தறை, பொலன்னறுவை புகையிர நிலையங்களில் இலவச வை-பை சேவையை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதி அமைச்சர் கௌரவ அஜித் பீ பெரேரா மற்றும் பல அரச அதிகாரிகள் முன்னிலையிலும் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தின் நோக்கமாவது ஒவ்வொரு இலங்கை குடிமக்களுக்கும் இலவச வை-பை வசதியை வழங்குவதாகும். இது ஐனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் 100 நாட்களின் வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட ஓர் செயற்திட்டமாகும். நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 1000 பொது இடங்களில் ஓவ்வொரு நபருக்கும் 100 mb வீதத்தில் 512 kpbs வேகத்தில் இலவச வை-பை சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் தலைவர், திருமதி. சித்ராங்கனி முபாரக், “இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த எங்கள் பங்குதாரர்கள் வழிவகுத்தனர். மேலும் குறுகிய காலத்தில் இவ்வாறான நீண்ட செயற்திட்டத்தினை வெற்றிகரமாக அமுல்படுத்தியது வியப்பாக அமைந்துள்ளது. தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையின் வரலாற்றில் இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உதவிய அனைவரின் முயற்சிகளையும் பாராட்டுகிறோம்” எனக் கூறினார்.

பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முகுந்தன் கனகே “அரச உறுதிமொழிக்கிணங்க தனது மக்களுக்கு குறுகிய காலத்தில் இவ்வாறான செயற்திட்டத்திற்கு சாட்சியாக இருப்பதையிட்டு பெருமையடைகின்றேன். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் குறுகிய காலத்தில் நீண்ட செயற்திட்டத்தினை வெற்றிகரமாக அமுல்படுத்தியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” எனக் கூறினார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களான அரச பல்கலைக்கழகங்கள், வரையறுக்கப்பட்ட தொழில்முறை கல்வி நிறுவனங்கள், புகையிரத நிலையங்கள், மத்திய பேருந்து தரிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பொது நூலகங்கள், பொது பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் இலவச வை-பை வசதி கணிசமான விகிதாசாரத்தில் செயற்படுத்தப்படுகின்றது.

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தலைமை நிறுவனமாகும். 2003-ம் ஆண்டின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம் இலக்கம் 27-ன் உறுப்புரையின் படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான அரசாங்க கொள்கை மற்றும் செயலாற்றல் திட்டத்தை அமுல்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ‘இக்டா’ கடமைப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் 6-ம் பிரிவின் உறுப்புரையின் படிஇ ‘இக்டா’ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்குவதற்கு அமைச்சரவைக்கு உதவியளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளது. ‘இக்டா’முழுமையாக இலங்கை அரசாங்கத்துக்கு உரித்தானது.

எங்கள் குடும்பம் ஒரு பகுதியாக

Top