இக்டாவின் அதிகார மாற்றமும் பரந்த புதிய திருப்பமும்

November 11, 2015

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய (‘இக்டா’) தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென அந் நிலையம் கூறுகிறது.

புதிய பணிப்பாளர் சபையில் திருமதி சித்ராங்கனி முபாரக் (தலைவர்), திரு. முகுந்தன் கனகே, (பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்), கலாநிதி அஜித் மதுரப்பெரும, திரு. ஆனந்த விஜேரத்ன, திரு. உபுள் குமாரப்பெரும மற்றும் சானுக வத்தேகம ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இப் புதிய பதவியேற்பு 2015 பெப்ரவரி 9-ந் திகதி இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராச்சிய அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வில் திருமதி சித்ராங்கனி முபாரக் மற்றும் கலாநிதி அஜித் மதுரப்பெரும, ‘இக்டா’வின் இதுவரை பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற பதவி வகித்த ரெஷான் தேவபுர ஆகியோரும் பல ஊடகவியலாளர்களும் பங்குபற்றினர்.

இந் நிகழ்வின்போது உரையாற்றிய கடந்த பதினொண்ணரை வருடங்களாக இக்டாவின் பிரதம செயலாற்றல் அதிகாரி (2003-2010) / மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி (2010-2015) ஆக பணிபுரிந்த ரெஷான் தேவபுர ‘இக்டா’ தற்போது பரந்த அளவில் செயல்படும் தகமைக்கு முன்னேறியுள்ளது என்றார். அதற்காக ஒரு புதிய திருப்பத்தைப் ‘இக்டா’ பெறுவது உகந்ததெனவும் அவர் மேலும் கூறினார்.

இந் நிகழ்வின்போது உரையாற்றிய ‘இக்டா’வின் புதிய பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே தாம் தனது இளம் பிராயத்திலிருந்தே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் ஆர்வங் கொண்டவராயிருந்து செயற்கை சந்திர தொடர்பாடல் முயற்சிகளிலும் உன்னிப்பாக ஈடுபாடுகொண்டிருந்தமை வரையில் அனுபவம் உள்ளவராயுள்ள பின்னணியில் ‘இக்டா’வின் செயற்பாடுகள் தனக்கு புறம்பானவை அல்ல என நம்பிக்கை தெரிவித்தார்.

பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்தின் கீல் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் பற்றிய எம்.எஸ்.சீ. பட்டம்பெற்ற முகுந்தன் கனகே அரச துறையிலும் தனியார் துறையிலும் பரந்த அளவிலும் புதிய முறைகளிலும் மக்களுக்கு மிகப் பயனளிக்கும் விதத்தில் தொழில் நுட்பம் விருத்தியடைவதற்கு எதிர்காலத்தில் ‘இக்டா’ பாரிய பங்கைக்கொள்ளவுள்ளது என்றார். “முன்னர் நாம் தொழில் முயற்சி அடிப்படையில் சிந்தித்தோம். தற்போது நாம் பயனர்கள் மனப்பான்மையில் சிந்திக்க வேண்டும்” என்றார்.

ஒன்பது வருடங்களாக ‘இக்டாவில்’ இலத்திரனியல் வழி மக்கள்தொழில் முயற்சி முன்னேற்றசெயல்பாடல்களில் ஈடுபட்டு 250செயற்றிட்டங்களை அறிமுகப்டுத்துவதில் முன்னிலை வகித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பீ’எஸ்.சீ. பட்டதாரியாகிய புதிய ‘இக்டா’ தலைவர் சித்திராங்கனி முபாரக் இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் “நாம் யாவரும் புதிய முறையில் சிந்திக்கவேண்டும். எல்லோரிடமுமிருந்து இப் புதிய பாதைக்கு ஏதுவான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன” என்றார்.

படவிபரம்
Caption
(இடமிருந்து) ‘இக்டா’வின் புதிய பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே, புதிய ‘இக்டா’ தலைவர் சித்திராங்கனி முபாரக் இதுவரை இக்டாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆக பணிபுரிந்த ரெஷான் தேவபுர

எங்கள் குடும்பம் ஒரு பகுதியாக

Top