இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் இலத்திரனியல் தொடர்பாடல் ஒப்பந்தத்தில் (UN Electronic Communications Convention) உறுப்புரிமை சமீபத்தில் கிடைத்தது. 2015 ஜுலை 8 திகதி கூடிய சர்வதேச வர்த்தக நீதி பற்றிய ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் 48-ம் ஆண்டமர்விலேயே இவ் உறுப்புரிமை வழங்கல் இடம்பெற்றது.
நிவ்யோக்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் இலத்திரனியல் தொடர்பாடல் ஒப்பந்தத்தில் உறுப்புரிமை கிடைத்தலை உறுதிசெய்யும் ஆவணத்தை (instrument of ratification) சமீபத்தில் நிவ்யோக்கில் சமர்ப்பித்தார்.
இவ் ஒப்பந்தத்தில் இலங்கைக்கு இவ்வாறு உறுப்பிரிமை கிடைத்ததன் காரணமாக இலங்கைக்கு சர்வதேச இலத்திரனியல் வர்த்தகத்தில் ஈடுபட சட்டபூர்வ உரிமை கிடைக்கிறது.
இவ் உறுதிப்பாட்டின் பயனாக இலங்கை தெற்காசியாவில் இவ் ஒப்பந்தத்தில் சேர்ந்த முதல் நாடாகவும் ஆசியாவில் (சிங்கப்பூருக்கு பின்) இரண்டாம் நாடாகவும் வரிசைப்படுத்தப்படுகிறது.
இலங்கைக்கு இவ்வாறு குறுகிய காலத்தில் ஐக்கிய நாடுகளின் இலத்திரனியல் தொடர்பாடல் ஒப்பந்தத்தை உறுதிசெய்யக் கூடியதாயிருந்தமைக்குக் காரணம் இலங்கையில் ஏற்கனவே அதற்காகத் தேவையான சட்டம் இருந்தமையாகுமென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (‘இக்டாவின்’) நீதி ஆலோசகர் ஜயந்தா பர்ணான்டோ கூறுகிறார். உதாரணமாக இலங்கையில் அமுலிலுள்ள 2006-ம் ஆண்டின் 19-ம் இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் ஐக்கிய நாடுகளின் இலத்திரனியல் தொடர்பாடல் ஒப்பந்தத்தை அடிப்படையாகக்கொண்டது.
இவ் உறுப்புரிமை இலங்கயைப் பொறுத்தவரையில் 2016 பெப்ரவரி 1-ம் திகதியிலிருந்து செல்லுபடியாகும். . ரஷ்யா உட்பட்ட அனேக நாடுகள் தற்போது இவ் ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ளன: அவுஸ்திரேலியா, தைலாந்து, வியற்நாம், தென்கொரியா மற்றும் சீனா இவ் ஒப்பந்தத்தை உறுதிசெய்வதற்காக தமது நாட்டின் சட்டங்களை ஏற்கனவே தயாரித்துவருகின்றன.
இவ் ஒப்பந்தத்தில் இலங்கை சேருவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் சட்டப்பிரிவின் பாரிய ஒத்துழைப்பு கிடைத்ததென்றும் இதற்காக ‘இக்டா’ முன்னணியிலிருந்து செயல்பட்டதென்றும் ஜயந்த பர்ணான்டோ கூறுகிறார்.