நாங்கள் யார்

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமான (ICTA) நாங்கள், அரசாங்கத்துடன் இணைந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகமாக இருக்கிறோம். 2003ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் (ICT Act) பிரகாரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான செயல் திட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கை என்பவற்றை அமுலாக்குவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு பணிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் 6வது பிரிவின் பிரகாரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்பற்றிய தேசிய கொள்கையை உருவாக்குவதில் அமைச்சரவைக்கு உதவும்படியும் அதன் உருவாக்கத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களை வழங்கும்படியும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவகமாகும். உலக வங்கியினால் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள மின்-இலங்கை அபிவிருத்தி கருத்திட்டத்தை 2004 முதல் 2011 வரை அமுல்படுத்துவதற்கு அது உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. மின்இலங்கை கருத்திட்டத்தின் ஊடாக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி செய்வதற்கும், வறுமையைக் குறைத்து இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்படும். எவ்வாறாயினும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் நாட்டிலும் அதன் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுசெய்ததன் காரணமாக அரசாங்கம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட அரசாங்கம் அது நிரந்தரமாக இருப்பதற்கு 2003ஆம் ஆண்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் முடிவு வாசகத்தை 2008ஆம் ஆண்டு திருத்தியது.

தற்பொழுது நாம் தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும்  பின்வருவனவற்றை உள்ளடக்கிய அமைச்சுகளுக்கு இடைப்பட்ட குழுக்களினால் மேற்பார்வைசெய்யப்படுடுகின்ற நிரந்தர நிறுவகமாக இருக்கின்றோம்.

 • தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்,
 • நிதி அமைச்சர்,
 • கல்வி அமைச்சர்,
 • நீதி அமைச்சர்,
 • பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்,
 • முதலீட்டு ஊக்குவிப்புக்கான அமைச்சர்,
 • கொள்கை திட்டமிடல் அமைச்சர்,
 • பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,
 • பாதுகாப்பு செயலாளர்,
 • பொதுநிருவாக செயலாளர்
 • தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு செயலாளர்
 • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய தலைவர்
 • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய முகாமைப் பணிப்பாளர்

இந்த வலுவான ஆட்சி கட்டமைப்புடன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஊடாக தேவைப்படுகின்றபோது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு ஆலோகர்களாக மற்றும் நிபுணர்களாக உள்ளவர்களுடன் இணைந்து, தனியார்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரின் சேர்க்கையாக இருக்கிறோம். நாங்கள் பின்வருகின்றவர்களின் தொகுப்பாக இருக்கிறோம்.

 • மிகத் திறமைவாய்ந்த நிபுணத்துவமுள்ள கருத்திட்ட முகாமையாளர்கள்
 • கட்டிட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள்
 • அனைத்து கலாசார விடயங்களையும் புரிந்துகொள்ளுகிகனற குறுக்கு கலாசார தொழில் புரிபவர்கள்
 • மொழித்திறன்வாய்ந்தவர்கள்
 • மதிப்பீட்டு திறன்வாய்ந்தவர்கள்

நாங்கள் இலங்கை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லுவதில் பெருமைப்படுகின்ற் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் சுய செயல் நோக்கமுள்ள உள்ளவர்களாக இருக்கிறோம்.

Top